தம்பி அது கிராபிக்ஸ் இல்லப்பா.. வேட்டையன் டீசரில் இடம்பெற்ற கண்ணாடியின் விலை எவ்வளவு தெரியுமா..?

Vettaiyan update: வேட்டையன் படத்தில் இருந்து டீசர் வெளியான நிலையில் இது குறித்து ரசிகர்கள் பல தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.  ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இதில் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக ரஜினி போராடுகிறார் மேலும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜெய்பீம் போலவே இந்த படமும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தை தொடர்ந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வில்லன் நடிகரிடம் அடியை வாங்கி மன்னிப்பு கேட்ட ரஜினி.! இதுக்கு பேர் தான் பெரிய மனுஷன்..

பகத் பாஸில் வில்லன் கதாபாத்திரத்திலும், அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது ரஜினியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படக் குழுவினர்கள் தலைப்புடன் கூடிய டீசரை வெளியிட்டு இருந்தனர்.

அப்படி வேட்டையன் என்ற டைட்டிலுடன் வெளியான டீசரில் ரஜினிகாந்த் கையில் லத்தியுடன் வருகிறார் குறி வச்சா இர விழனும் என்ற பஞ்ச் டயலாக்கும் பேசி இருந்தார். இந்த டயலாக் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூலர்ஸ் கண்ணாடியை போடுவது செம ஸ்டைலாக இருந்தது. எனவே இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் இந்த ஸ்டைல் புதிதாக இருக்கு என கூறி வருகிறார்கள்.

மோசமான ரிலேஷன்ஷிப்.. நல்ல வேலை தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு.. தப்பித்து வந்த பிரியா பவானி சங்கர்.

மேலும் பக்காவான கிராபிக்ஸ் காட்சி என ஒரு தரப்பு கூற இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் கிராபிக்ஸ் எல்லாம் இல்லை Magnetic Clip on Glasses வகையைச் சேர்ந்த கண்ணாடி. ஜெயிலர் படத்தில் எப்படி சிகாரை வாயில் தூக்கி போடுவது ஒரிஜினலாக இருந்தது அதே போல இதையும் தலைவர் செய்திருப்பார் அந்த கண்ணாடியின் விலை 3000 ஆரம்பிப்பதாக கூறி உள்ளனர்.