பிசிறு தட்டாமல் மறைந்த ரகுவரன் போல் இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

Actor Raghuvaran Son photo: மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக இதனைப் பார்த்து ரசிகர்கள் ரகுவரனை போலவே அச்சு அசல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ரகுவரன்.

கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்து வந்த ரகுவரன் சினிமாவிற்காக தேவையான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார் இதன் மூலம் பல போராட்டத்திற்குப் பிறகு ஏழாம் மனிதன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

விஜயகாந்த் படுக்க போட்டு பம்பரம் விட்ட சுகன்யாவா இது… 50 வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

முதல் படத்திலேயே ரகுவரனின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது எனவே தொடர்ந்து அடுத்தடுத்து வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். பொதுவாக வில்லன் என்றால் கட்டுக்கோப்பான உடல், கட்ட குரல் என கம்பீரமாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு எதிர்மறாக அறிமுகமானவர்தான் நடிகர் ரகுவரன். குழி விழுந்த கண்ணம், அளவுக்கு அதிகமான உயரம், ஒல்லியான தேகம், மீசையில்லாத முகம் என அறிமுகமாகி வில்லனாக கலக்கினார்.

அப்படி முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் ரகுவரன் மார்க் ஆண்டனியாக நடித்து மிரட்டினார். ரஜினியே ரகுவரனின் நடிப்பை பார்த்து மிரண்டு போனார். அப்படி ‘பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன் ஆனால் மார்க் ஆண்டனியாக இனி யாராலும் நடிக்க முடியாது’ என ரஜினி கூறினார். இவ்வாறு தமிழ் சினிமாவின் டாப் வில்லனாக இருந்து வந்த ரகுவரன் 1996ஆம் ஆண்டு ரோகினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஹீரோயின் போல் இருக்கும் தேவ தர்ஷினி மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார் மேலும் 2004ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ரோகினி உடன் வசித்து வந்த தனது மகனை நினைத்து மிகவும் மனதளவில் வருத்தப்பட்டார். இந்த சூழலில் 2008ஆம் ஆண்டு மாரடைப்பால் ரகுவரன் உயிரிழந்தார் அதிகமான குடிப்பழக்கமும், மன அழுத்தமும்  அவரது இறப்பிற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

Actor Raghuvaran Son photo
Actor Raghuvaran Son photo

25 வயதாகும் ரகுவரனின் மகன் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி ஆங்கில மொழியில் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டு இருக்கும் நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் அச்சி அசல் ரகுவரனை போலவே அவர் மகன் இருப்பதாக கூறி வருகின்றனர்.

Actor Raghuvaran Son photo
Actor Raghuvaran Son photo