விஜயகாந்த் படுக்க போட்டு பம்பரம் விட்ட சுகன்யாவா இது… 50 வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

Actress Sukanya: ஏராளமான முன்னணி நடிகைகள் தங்களது இளமை காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி உள்ளனர். அப்படி மேலும் சில நடிகைகள் தங்களுக்கு கிடைக்கும் கேரக்டரிலும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யாவின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

50 வயதிலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 1991ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சுகன்யா. முதல் படத்தின் மூலம் வெற்றினை பெற தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஹீரோயின் போல் இருக்கும் தேவ தர்ஷினி மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

அப்படி நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், தாலாட்டு, கேப்டன், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், கோட்டைவாசல் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை கண்டது.

மேலும் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்தார். இவ்வாறு இதன் மூலம் புகழின் உச்சத்தில் இருந்து வந்த சுகன்யா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குறைந்தது.

நான்தான் விஜய்யை வைத்து இயக்குவேன் தளபதி 69-க்காக போட்டி போடும் இயக்குனர்கள்.. தளபதி எடுத்த அதிரடி முடிவு..

தமிழில் கடைசியாக திருமணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு சன் டிவி, ராஜ் டிவி, டிடி பொதிகை, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் இவ்வாறு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

actress sukanya
actress sukanya

ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யாவிற்கு தற்பொழுது ஒரு மகளும் உள்ளார். திருமணமான உடன் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான இவருடைய திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் நிறைவடைந்தது. விவாகரத்து பெற்று பிரிந்த சுகன்யா தற்பொழுது சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.