பாலுமகேந்திரா, மணிரத்தினம், செல்வமணி, ஹரி, சங்கர் திரைப்படங்களில் நடித்த நடிகரின் பரிதாபமான நிலை.. அடக்கடவுளே இவருக்காக இந்த நிலைமை..

prashanth thiagarajan : ஒரு நடிகனாக நடிப்பதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ அதை அனைத்தையும் திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகர் பிரசாந்த் இவர் 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார், தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனுக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

தான் நடித்த முதல் திரைப்படத்தில் நுழைவதற்கு தன்னுடைய அப்பாவின் பெயர் அடையாளமாக இருந்தது. அதன் பிறகு இவருடைய சிறந்த நடிப்பாலும் கதை தேர்வாளும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார் சாக்லேட் பாய் என்று பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். வைகாசி பொறந்தாச்சு 1990 முதல் வின்னர் 2003 வரை இவரது சொந்த வாழ்க்கை மற்றும் திரைத்துறை பயணம் அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட சரக்கு.. கீர்த்தி சுரேஷின் மது பழக்கத்திற்கு காரணம் இவர்தானா..

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற்றது ஆனால் இவரின் திருமண வாழ்க்கை மற்றும் சந்தோஷமாக அமையவில்லை போலீஸ் கோர்ட் விவாகரத்து என்று தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார் அதனால் நடிப்பு முழுவதுமாக பாதிக்கப்பட்டது வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த இவர் பிறகு சருக்களை சந்தித்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இவர் நடிக்க வேண்டிய பல திரைப்படங்கள் கைவிடப்பட்டது எப்படியாவது வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என எண்ணி மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பார்த்தார் ஆனால் அதுவும் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

 கடைசியாக தன்னுடைய தந்தையின் மம்முட்டியான் திரைப்படத்தைக் கூட ரீமிக்ஸ் செய்து அதிலும் நடித்துப் பார்த்தார் ஆனால் காலக்கொடுமை இவருக்கு எதிராகவே இருந்தது இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியாகிய வினைய விதேய ராமா என்ற திரைப்படத்தில் குணச்சத்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனைப் பார்த்த பல ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என பலரும வருத்தப்பட்டார்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

பாலுமகேந்திரா, மணிரத்தினம், செல்வமணி, ஹரி, ஷங்கர், சுந்தர் சி, வசந்த் என தரமான இயக்குனர்களுடன் பணியாற்றி வந்த பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் வெற்றி நாயகனாக வலம் வந்தார் ஆனால் தற்பொழுது சரியான கதைகள் அமையாததாலும்  சரியான இயக்குனர் கிடைக்காததால் இன்னும் பள்ளத்திலேயே கிடக்கிறார் இவருக்கு சாதாரண வெற்றி பத்தாது மாபெரும் வெற்றியாக அமைந்தால்தான் இவர் திரைப்பயணம் சிறப்பிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.