படத்தின் பட்ஜெட்டையே சம்பளமாக கேட்ட தனுஷ்.. கிடுகிடுத்த தயாரிப்பு நிறுவனம்

Dhanush 51: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தானே இயக்கி நடித்து வரும் தனுஷ் 50வது படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் 51வது படத்திலும் நடித்த வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறாராம். சேகர் கமுலா இயக்கம் படத்தை தொடர்ந்து ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்பொழுது இப்படம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம் ஏனென்றால் தனுஷ் இந்த படத்திற்கு அதிக சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.25 கோடி வரை ஒரு படத்தில் சம்பளம் வாங்கி வரும் தனுஷ் தற்பொழுது சுமார் 40 கோடி வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளார்.

எனவே ஹச் வினோ தனுஷ் கூட்டணி என்பதால் இப்படத்தின் வியாபாரம் அதிகமாக இருக்கும் இதனால் தான் தனுஷ் அதிக சம்பளம் கேட்டுள்ளாராம். இதனை அடுத்து பலமுறை இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாகவும் பிறகு தனுஷ் தனது தரப்பிலிருந்து விவரித்துள்ளார்.

வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய சோகம்.? என்ன நடந்தது தெரியுமா.?

அதன்படி சுமார் ரூ.35 கோடி சம்பளம் கொடுப்பதற்கு படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை இதுவரையிலும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் சமீப காலங்களாக வெளியாகும் தனுஷின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.