நடிக்கவில்லை என்றாலும் கோடியில் புரளும் அஜித் மனைவி.! 43 வயதில் ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சம்பளம் மட்டுமே இவ்வளவா?

Shalini Ajith Net worth: சினிமாவை வீட்டு விலகி இருந்தாலும் பலகோடி சம்பளத்துடன் சொத்து சேர்த்து வைத்திருக்கும் நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி குறித்து பார்க்கலாம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான ஷாலினி தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட திரைப்படங்களில் பேபி ஷாலினியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர் 1997ஆம் ஆண்டு அனியாதி பிராவு என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் அப்படம் ரீமேக் செய்யப்பட்டது இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலேயே ஹீரோயினாக பிரபலமான ஷாலினிக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பெரிய புள்ளிகள்.! தப்பித்த பிக் பாஸின் எடுபுடி

அப்படிதான் ஷாலினி அஜித் உடன் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் சூட்டிங் என்பது அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போக தனது காதலை கூறியுள்ளார். இதற்கு ஷாலினியும் ஓகே சொல்ல காதலிக்க தொடங்கியுள்ளனர். அமர்க்களம் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக கண்ணுக்குள் நிலவு மற்றும் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்த சூழலில் 2000ஆம் ஆண்டு அஜித் ஷாலினி திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகினார் ஷாலினி. திருமணமான 8 ஆண்டுகள் கழித்து அஜித்-ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு ஆத்மிக் என்ற ஆண் குழந்தையை ஷாலினி பெற்றெடுத்தார்.

வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் மூன்று போட்டியாளர்கள் இவர்கள்தான்.! பரபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி..

இன்று ஷாலினி தனது 43வது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்பொழுது இவருடைய சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் வைத்துள்ளாராம் ஷாலினி.

தற்போது நடிக்கவில்லை என்றாலும் கடைசியாக சினிமாவில் நடித்த பொழுது ரூபாய் 50 லட்சம் சம்பளம் வாங்கினாராம். இது தவிர பல்வேறு சொகுசு கார்களும் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு ரூபாய் 200 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.