AK- 63 : ஸ்டைலிஷ் வில்லனை குறிவைக்கும் அஜித்.! AK 63 நடிகர்களின் பட்டியல் இவர்களா.?

Actor Ajith Kumar: துணிவு படத்தின் வெற்றினை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டும் வேல ராமமூர்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

மேலும் படத்திற்கான பணிகள் துவங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஸ்ரீதேவி பிரசாத் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக தபு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தபு, அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது இதனை அடுத்து இரண்டாவது முறையாக அஜித் 63 படத்தில் இணைய உள்ளனர். இதனை அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் அரவிந்த் சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதுங்கி பாய்ந்த அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

சமீப காலங்களாக எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அரவிந்த் சாமியும் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளார்.