அஜித்தை தூக்கி நிறுத்திய 5 ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறுக்க முடியாத பில்லா..

Actor Ajith Kumar 4 super hit remake movies: துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 5 ரீமேக் படங்கள் குறித்து பார்க்கலாம்.

பரமசிவன்: 1999ஆம் ஆண்டு வெளியான கார்டூஸ் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் 2006ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் தமிழில் வெளியான பரமசிவன். இப்படத்தை பி வாசு இயக்க அஜித்துடன் இணைந்து லைலா, நாசர், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அஜித் விஜய்க்கு போட்டியாக உருவாகிறாரா சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எத்தனை திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது தெரியுமா.!

கிரீடம்: 1989ஆம் ஆண்டு கிரீடம் என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான இப்படம் அதே பெயரில் 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது . கிரீடம் படத்தை ஏஎல் விஜய் இயக்க த்ரிஷா, ராஜ்கிரன், விவேக், சந்தானம், சரண்யா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அவள் வருவாளா: 1997ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி படத்தின் ரீமேக் தான் 1998ஆம் ஆண்டு தமிழில் வெளியான அவள் வருவாளா. இப்படத்தில் அஜித் குமார் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுஜாதா, பப்லு பிரித்விராஜ், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர்கள் துணை கேரக்டரில் நடித்திருந்தனர். அவள் வருவாளா படத்தை ராஜ் கபூர் இயக்கினார்.

நேர்கொண்ட பார்வை: ஹிந்தியில் 2016ஆம் ஆண்டு பிங்க் என்ற பெயரில் ரிலீஸான இப்படம் 2019ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் அஜித் குமார் நடிப்பில் வெளியானது இப்படத்தை எச். வினோத் இயக்க பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

OTT யை நம்பி படம் பண்ண கூடாது.. சும்மா இருந்த விஜய், வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுக்கிறாரா வெற்றிமாறன்.!

பில்லா: 1078ல் டான் என்ற படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படத்தின் ரீமேக் தான் 2017ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் தமிழில் வெளியான பில்லா. இப்படத்தின் விஷ்ணுவர்தன் இயக்க நமீதா, நயன்தாரா, பிரபு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.