கை, கால் உடைத்து கொண்டு நடிப்பது நடிப்பு அல்ல.. நடிகர் விக்ரமை விளாசிய இயக்குனர்

Vikram : நடிப்பு அரக்கன் என்றால் நாம் நினைவிற்கு வரும் பெயர் சிவாஜி, கமல் அடுத்து விக்ரம் தான்.. சேது படத்தில் உடலை வருத்திக்கொண்டு கனகச்சிதமாக நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டார் அதனைத் தொடர்ந்து பிதாமகன், ஐ, கோப்ரா என சொல்லிக் கொண்டே போகலாம்.. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் இந்த படத்தில் அதிகமாக பேசவே மாட்டார் பிதாமகன் படத்தில் நடித்தது போலவே தான் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.  இந்த படத்தில் அவருடைய லுக் மற்றும் கதைகளும் வேறு மாதிரியாக வந்து உள்ளதால் தங்கலான் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டை காட்சிக்காக மட்டுமே ஒரு படத்தை 120 முறை பார்த்த விஜயகாந்த்.. ஹீரோ யார் தெரியுமா.?

அடுத்து சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் இந்த நிலையில் விக்ரம் பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..  நடிகர் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விக்ரமை வைத்து விண்ணுக்கும், மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினேன். அந்த படம் தான் ரசிகர்களின் இல்லம் வரை சேர்த்தது ஆனால் அந்த படத்தினை பிடிக்கவில்லை என்று விக்ரம் கூறியுள்ளார் நான் விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டேன்.

கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்த தளபதி விஜய்.. வைரலாகும் செய்தி

கை, கால் உடைத்துக் கொண்டு கண்ணை ஒரு மாதிரியாக நடிப்பது நடிப்பு அல்ல.. விண்ணுக்கும், மண்ணுக்கும் படத்தில் விக்ரமுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அவருக்கு சரியாக நடிக்க தெரியாது. ரஜினி, கமல் மாதிரி மிமிக்கிரி நடிப்பை தான் செய்வார் என ராஜகுமாரன் கூறியுள்ளார் இந்த செய்தி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.