MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?

Thirisoolam Movie: ஒரு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று அந்த மொழியில் அப்படத்தின் வசூலை எந்த படத்தாலும் முறியடிக்கவில்லை என்றால் அந்த படத்தின் வசூல் சாதனையை வைத்து இன்டஸ்ட்ரி ஹிட் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி 1973ஆம் ஆண்டு எம்.ஜி ராமச்சந்திரன் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இந்த படத்தின் வசூலை ஐந்து வருடங்களாக எந்த படமும் முறியடிக்கவில்லை.

இந்த சூழலில் 1979ஆம் ஆண்டு வெளியான சிவாஜியின் திரிசூலம் படம் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்து புதிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. எனவே இது குறித்த சுவாரசியமான தகவல்களும் உள்ளன அதாவது ஆந்திராவைச் சேர்ந்த பி. மாதவன் சினிமா கற்று 1963ல் மணி ஓசை படத்தை இயக்கினார். இந்த படம் சுமாராக அமைந்தாலும் இதனை அடுத்து அன்னை இல்லம் என்ற படத்தினை இயக்கும் பொறுப்பை சிவாஜி மாதவனுக்கு வழங்கினார்.

இந்த படம் வெற்றி பெற்றது எனவே எம்.ஜி ராமச்சந்திரன் அழைத்த தனது தெய்வத்தாய் படத்தை இயக்குமாறு மாதவனிடம் கூறியுள்ளார் இயக்குனர் வேளையில் எம்.ஜி ராமச்சந்திரன் தலையிடுவது மாதவனுக்கு பிடிக்கவில்லை இருவருக்கும் இடையே இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இந்த படம் நின்றது.

போதுண்டா சாமி இழுத்து மூடுங்க 1000 எபிசோடு முடிஞ்சிடுச்சு.! முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.! புதிய சீரியலில் ஜீ தமிழ் பிரபலம்

ஒரு கட்டத்தில் இயக்குனர் வேலையில் தலையிட மாட்டேன் என்று எம்.ஜி ராமச்சந்திரன் கூறியதனால் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. எனவே இதனால் இருவரும் இதற்கு மேல் ஒன்றாக பணியாற்ற மாட்டோம் என பரஸ்பரம் சபதம் செய்து கொண்டனர். இந்த சூழலில் சிவாஜி நடிப்பின் நீல வானம், எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு, ராமன், எத்தனை ராமனடி, சபதம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை தொடர்ந்து இயக்கினார்.

இதில் பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது 1975ல் தனது தயாரிப்பில் சிவாஜியை வைத்து பாட்டும் பரதமும் படத்தை இயக்கினார் இப்படம் தோல்வி அடைந்தது. மேலும் விஜயகுமார் வைத்து எடுத்த பாலூட்டி வளர்த்த கிளி, தேவியின் திருமணம், விஜயகுமார் ரஜினி நடிப்பில் இயக்கிய என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், ஏணிப்படிகள் என தொடர்ந்து பல படங்கள் தோல்விகளை சந்தித்தது.

இவர் இந்த நேரத்தில் கன்னடத்தில் வி சோமசேகர் இயக்கத்தில் ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்த சங்கர் குரு படம் மாபெரும் வெற்றினை பெற்றது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி விரும்பினார் அதன் உரிமையை தனது சிவாஜி பிலிம் சார்பில் வாங்கி அதனை தமிழில் ரீமேக் செய்ய மாதவனிடம் முன் பணம் கொடுத்தார்.

வீட்டுக்கு வீடு வாசப்படி படத்தை சொந்தமாக தயாரித்து இயக்க முடிவு செய்து இருந்ததால் வாங்கிய முன் பணத்தை திரும்பிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு இயக்கிய எந்த படமும் சரியாக ஓடவில்லை மாதவன் முன் பணம் திரும்பிக் கொடுத்ததும் சிவாஜி சங்கர் குருவின் பொறுப்பை கே. விஜயினிடம் ஒப்படைத்துள்ளார்.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

எனவே திரிசூலம் என்ற பெயரில் தயாரான இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாஜியின் 9 படங்களை இயக்கும் வாய்ப்பை கே விஜயன் பெற்றார். சிவாஜியின் 200வது படமாக 1979ல் ஜனவரி 27ஆம் தேதி வெளியான திரிசூலம் படம் 175 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்தது இவ்வாறு அன்றைய காலகட்டத்தில் 3 கொடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.