மெகா ஹிட் அடித்த ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தான்.! பல வருடம் கழித்து வெளியான தகவல்..

Jeans Movie: ஜீன்ஸ் படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடித்திருந்த நிலையில் ஆனால் ஷங்கரின் முதல் சாய்ஸ் பிரசாந்த் கிடையாதாம் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்துள்ளார் ஆனால் சில காரணங்களால் பிறகு சங்கர் பிரசாந்த் நடிக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் வெற்றினை பெறாத காரணத்தினால் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

90 காலகட்டத்தில் கலக்கி வந்த அப்பாஸ் 1998இல் இவருடைய நடிப்பில் வெளியான ஜீன்ஸ் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவருடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த இப்படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இவரை தொடர்பு நாசர், லட்சுமி, ராதிகா, ராஜி சுந்தரம், செந்தில், எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.

வீட்டை விற்க முடிவெடுத்த தசாதரன்.. கடைசி நேரத்தில் அப்பா, அம்மா கௌரவத்தை காப்பாற்றிய மகா -ஆஹா கல்யாணம் ப்ரோமோ

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே அந்த காலகட்டத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக ஜீன்ஸ் விளங்கியது. மேலும் வெளிநாட்டு மொழி திரைப்படத்தின் கீழ் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது ஆனால் இறுதி நாமினேஷனில் இந்த படம் இடம்பெறவில்லை.

இவ்வாறு படம் மட்டுமல்லாமல் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் பெற்றது. இந்த படத்தில் பிரசாந்த் கேரக்டரில் முதலில் அப்பாஸை நடிக்க வைக்க சங்கர் முடிவு செய்திருந்தாராம். ஆனால் அப்பாஸ் அந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே விஜயாவை மதிக்காத ஸ்ருதி.. பணக்கார மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியார் – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.

இவரைத் தொடர்ந்து அஜித்திடம் கேட்டுள்ளார் அவரும் படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததால் பிறகு பிரசாந்தை அணுகி கதை சொல்ல பிரசாந்த் ஓகே சொல்ல பிறகு ஜீன்ஸ் படம் உருவாகியுள்ளது. மேலும் ஜீன்ஸ் பட முழு நீள காமெடி படமாகவே எடுக்கப்பட்டு இருந்தது. பிரசாந்தின் தந்தையாக நடித்த நாசர் கேரக்டருக்கு முதலில் நடிகர் கவுண்டமணியை தான் சங்கர் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அப்பொழுது கவுண்டமணியால் நடிக்க முடியாமல் போக பிறகு நாசரை அணுகி கதை கூறியுள்ளார்.