முதன் முறையாக ராஜலக்ஷ்மியை எதிர்த்து பேசும் மகா.! உங்க நடிப்பு ஒருநாள் மகாவுக்கு தெரியத்தான் போகுது சூர்யா.! ஆஹா கல்யாணம் எபிசொட்

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் மகாவை அரையா கை ஓங்கும் ராஜலட்சுமி. உடனே சூர்யா மகாவை அடிக்க யாருக்கும் உரிமை இல்லை.  அவ என்ன தப்பு செய்திருந்தாலும் அடிக்க கை ஓங்குவது தவறு நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு இதுவரை யாரும் இப்படி ஒரு காரியத்தை செய்ததில்லை. நீங்க எப்படிம்மா இப்படி செய்யலாம் என சூர்யா அனைவரும் முன்பும் அம்மாவை கேள்வி கேட்கிறார்.

பிறகு மகா, மீனாட்சி அத்தை கிட்ட பணம் கேட்ட விஷயம் எனக்கு தெரியாது என சொல்கிறாள். ஆனால் சித்ரா நீ பொய் சொல்லாத மீனாட்சி தான் உன்கிட்ட சொன்னாள ராஜலட்சுமி மேடம் கிட்ட பணம் கேட்டேன் அவங்க குடுக்கலன்னு நீ தான தரேன்னு சொன்ன என்ன பொய் சொல்கிறாள்.

தன்னுடைய தத்துவத்தை போல் அழகாக இருக்கும் பார்த்திபனின் மகளை பார்த்துள்ளீர்களா.?

சித்ரா சொல்லும் இந்த பேச்சை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் யாரும் நம்பவில்லை. மீனாட்சி உண்மையை சொல்ல வருகிறார் அதற்கு சித்ரா அவளை முறைத்து சொல்ல விடாமல் தடுத்து விடுகிறாள்.

மேலும் மகா ராஜலட்சுமி இடம் உங்களுக்கு இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது எனக்கும் அதே மாதிரி தான் நீங்க எது செய்தாலும் பாட்டியிடம் கேட்டுட்டு தான் செய்றீங்களா என ராஜலட்சுமியயை எதிர்த்து கேள்வி கேட்கிறாள்.

சூர்யாவும் ராஜலட்சுமியிடம் அம்மா மகா என்கிட்ட கேட்டுட்டு தான் பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள் என சொல்கிறான். எனவே வீட்டில் இருக்கும் அனைவரும் மாறி மாறி ராஜலட்சுமி யிடம்  நீ அடிக்க கை ஓங்கியது சரியில்லை என கேள்வி கேட்கின்றனர். உடனே கோபமான ராஜலட்சுமி என் மேல தான் தப்பு இனிமே இந்த வீட்டில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துலையும் நான் தலையிட மாட்டேன் நான் ஒரு ஜடமா இருந்துக்குறேன் இனிமே இந்த வீட்டை விட்டு நான் வெளியே கூட போக மாட்டேன் யார்கிட்டயும் பேச மாட்டேன் என கோபமாக சொல்கிறாள்.

கொழுந்தனார நான் கேடிக்கெல்லாம் கேடி அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டேன்.. மலேசியா மாமாவால் ரோகிணி எடுத்த அதிரடி முடிவு..!

மேலும் சூர்யா தாத்தா, பாட்டியிடம் நீங்க என்ன அமைதியா இருக்கீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா என  கேட்கிறார். அதற்கு இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை இருக்கு நான் பேசுவதை யார் கேட்கிறார் என கோபமாக பதில் சொல்கிறார் தாத்தா. மேலும் நம் குடும்பத்தில் நாட்டுக்காக போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்.

ஆனால் இங்கு இன்று ஒரு பெண் தான் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்கிறாள். ஆனால் அவளுக்கு இங்கு சுதந்திரமாக இருக்க உரிமை இல்லை என கோபமாக பேசுகிறார்.

பின்னர் அதனை தொடர்ந்து  ராஜலட்சுமி மாடியில் நின்று கொண்டிருக்கிறாள். அவளை சமாதானப்படுத்த சூர்யா போகிறார். ஆனால் அவளோ உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் கேட்டுகிட்டு என்னை எல்லாத்து முன்னாடியும் கால்ல போட்டு மிதிச்சிட்ட, அவள தலையில் தூக்கி வச்சுகிட்டு ஆடுற. இதுதான் நீ அம்மாவுக்கு கொடுக்கிற மரியாதையா என கோபமாக பேசுகிறாள்.

அப்போது சூர்யா தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்ற உண்மையை சொல்ல போகிறார். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் வீடே ஒரு சுடுகாடு போல ஆகிவிடும் அதனால் சொல்ல வேண்டாம் என முடிவு செய்கிறான். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.