தன்னுடைய தத்துவத்தை போல் அழகாக இருக்கும் பார்த்திபனின் மகளை பார்த்துள்ளீர்களா.?

parthiban family photo: தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமாகி இருக்கும் நடிகர் பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு நடிப்பது, இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பார்த்திபன் இதன் மூலம் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.

அப்படி தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்ததால் இருவரும் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் கீர்த்தனா மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறுமியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் கீர்த்தனா பெற்றார்.

தற்பொழுது கீர்த்தனா உதவி இயக்குனராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாந்தின் மகனான அக்ஷயை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்தின் பொழுது எடுத்துக்கொண்ட பார்த்திபனின் குடும்ப புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

parthiban family photo
parthiban family photo

இதனைப் பார்த்து ரசிகர்கள் பார்த்திபனுக்கு எவ்வளவு பெரிய குழந்தைகளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம். பார்த்திபன் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்திலிருந்து கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.