ராஜலட்சுமியின் திட்டத்தை அறிந்த தாத்தா!! காவேரியை கொலை செய்ய முயற்சிக்கும் ராகினி.!!

aaha kalyanam : மகாநதி மற்றும் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பலூன் உடைக்கும் போட்டி நடைபெறுகிறது. முதலில் ஐஸ்வர்யாவும் கௌதமும் கலந்து கொண்டு ரொமான்டிக்காக விளையாடுகின்றனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து  காவேரியும் விஜய்யும் கலந்து கொள்கின்றனர் விளையாடும் போது இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். பின்னர் மகாவும் சூர்யாவும் விளையாடும் போது அவர்களும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

சூர்யா விளையாடும் போது முத்தம் கொடுத்ததை பார்க்கும் ராஜலட்சுமி கடுப்பாகிறாள். சூர்யா விளையாண்டு முடித்ததும் சூர்யாவை கூப்பிட்டு இனிமே நீ விளையாடக்கூடாது என சொல்கிறாள். இதை அனைத்தையும் மறைந்திருந்து தாத்தா பார்த்துக் கொண்டிருக்கிறார்.போட்டி முடிந்ததும் கங்கா போன் பேசிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறாள். அப்போது மாடியில் இருந்து குமரன், கங்கா மேல் பூ தூவுகுகிறார். கங்கா மேலே பார்க்கிறார் அங்கு யாரும் இல்லை.

சத்யா செய்த தவறு.. முத்துவிடம் சிக்கிய CCTV ஆதாரம்.! மீனாவை வீட்டை விட்டு அனுப்ப முடிவு செய்த விஜயா.?

உடனே கங்கா அந்த இடத்தை விட்டு நகர்ந்து இன்னொரு இடத்தில் போய் நிற்கிறாள். அங்கும் அவள் மீது பூ கொட்டுகிறது. உடனே யார் என கேட்கிறாள். குமரன் நான் தான் என சொன்னதும் உங்களுக்கு இப்படியெல்லாம் கூட செய்ய தெரியுமா என கங்கா கேட்கிறாள். இன்னைக்கு உன்னோட பிறந்த நாள்ல அதான் என சொல்கிறார். உடனே அதற்கு கங்கா எப்படியாவது இந்த போட்டியில் நாம் ஜெயித்து 5 லட்சம் பணத்தை வின் பண்ணி விட வேண்டும் என சொல்லி குமரனை கட்டி அணைக்கிறாள். குமரன் கங்கா கட்டிபுடித்த சந்தோஷம் தாங்காமல் சத்தம் போட்டு பாட்டு பாடி  டான்ஸ் ஆடுகிறார்.

அடுத்த சீனில் காவிரியும் விஜய்யும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இப்போது காவேரி எனக்கு ஸ்விம்மிங் தெரியாது என சொல்கிறாள். இதை ராகினி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாள். பின்பு காவிரியும் விஜயும் முத்தம் கொடுத்து கொண்டதைப் பற்றி பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

விஜய் அங்கிருந்து சென்றதும் காவேரியை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்ய பிளான் பண்ணுகிறாள் ராகினி. ஆனால் திடீரென குமரன் வந்து காவிரியை அழைத்து சென்று விடுகிறார். ராகினியின் பிளான் சொதப்பிவிட்டதால் கடுப்பாகிறாள். அடுத்த சீனில் மகா தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது சூர்யா அவளைப் பார்த்து என்ன பைத்தியம் புடிச்சிருச்சா என்ன கேட்கிறார். அதற்கு மகா இன்னைக்கு நீங்க எனக்கு  கொடுத்த முத்தத்தை நினைத்து தான் சிரிச்சிட்டு இருக்கேன் அத்தான் என பேசுகிறார்.

சூப்பர் ஸ்டாருக்கே தண்ணி காட்டிய மணிகண்டன்.! லவ்வர்ஸ் இடம் அடிபணிந்த லால் சலாம்.. இரண்டாவது நாள் வசூல் விவரம் இதோ.

மேலும் முத்தத்தை பற்றி கவிதை எல்லாம் சொல்கிறாள். இந்த போட்டியில் நான் ஜெயிச்சாலும் தோத்தாலும் அதை பத்தி எனக்கு பிரச்சனை இல்ல நீங்க இன்னைக்கு கொடுத்த முத்தம், அதான் எனக்கு சந்தோசம் அத்தான் என வார்த்தைக்கு வார்த்தை அத்தான் என சொல்லி பேசுகிறாள். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அது மாதிரி முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

மேலும் அடுத்த சீனில் ஐஸ்வர்யா கௌதமிற்காக பெட்டை ரொமான்டிக்காக பூ போட்டு அலங்கரித்து அவளும் நைட் ஷூட்டில் மிக ரொமான்டிக்காக கௌதமை கொஞ்சுகிறாள். இவர்களைத் தொடர்ந்து சூர்யாவும் விஜயும் தனிமையாக உட்கார்ந்து பொண்டாட்டியை பத்தி கலாய்த்து ஜாலியாக சிரித்து பேசுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்