அடிமட்டமாக இறங்கி மகா செய்த வேலை.. பற்றி எரியும் ராஜலட்சுமியின் அடிவயிறு – ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ

Aaha Kalyanam Serial Promo : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடுகளில் மகா அவங்க அப்பா அம்மா வீட்டுக்கு போய் மண் வேலை செய்ததால் முதலில் ஒரு பிரச்சினையாகியது பிறகு அந்த பிரச்சினை சரியாகி சூர்யாவே மகாவை அவங்க வீட்டுக்கு வேலைக்கு அனுப்பும் பொழுது சூர்யாவும் சேர்ந்து ஒரு நாள் மண் மிதித்தார்.

அதனை சித்ரா தேவி மற்றும் கௌதம் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் அப்டேட் செய்ய வீட்டில் பெரிய பிரச்சினை வந்து மகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி பிறகு ராகவ் தான் என்னோட மருமக மகா இங்க தான் இருப்பா என்று மகாவை இங்கவே தங்க வைத்தார். இவ்வளவு பிரச்சினையாகி மீண்டும் மகா அவங்க அப்பா அம்மா வீட்டிற்கு வேலைக்கு போய் இருக்கிறார்.

மீனாவை கௌரவப்படுத்தி ஸ்ருதி மூஞ்சில் பணத்தை விட்டு எறிந்த முத்து.. பத்ரகாளியாக மாறப் போகும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அதனால் ராஜலட்சுமி இந்த வீட்ல இருக்கிற யாரும் இனி மகா கிட்ட பேசக்கூடாது என்று கட்டளை போட்டு இருந்தார். அதனால் எல்லோரும் மகாவிடம் பேசாமல் ஒதுக்கி வைத்து விட்டனர் இந்த நிலையில் ஆகா கல்யாணம் சீரியல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீடியாகாரங்கள் வேதாச்சலம் வீட்டிற்கு வந்து மகாவை பார்த்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க பிரஸ் மீட்ல பேசியதை டிவில பார்த்தோம்..

ஒரு பெரிய கம்பெனியோட எம்டி உங்க கூட சேத்துல இறங்கி வேலை செஞ்சது எவ்வளவு பெரிய விஷயம் என்று பாராட்டுகின்றனர்.. உடனே மகாவும் புருஷனை விட்டுக் கொடுக்காமல் நான் இவர கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னோட பூர்வ ஜென்ம புண்ணியம் என்று சொல்கிறார் பிறகு அவர்கள் சூர்யா மற்றும் மகாவிற்கு சால்வை அணிவித்து கௌரவிக்கின்றனர்..

Vijayakanth VS Kamal : 22 முறை நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்று யார் தெரியுமா.?

இதைப் பார்த்த ராகவ் மகா அன்னைக்கு சூர்யாவை மண்ல இறக்கி விட்டுட்டான்னு தானே பிரச்சனை பண்ணுன இன்னைக்கு அதுதான் அவனுக்கு பாராட்டு வாங்கி கொடுத்திருக்கு என்று சொல்வதும் ராஜலக்ஷ்மி நீங்க வேணும்னா அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்க என்னால மாற முடியாது மாறவும் மாட்டேன் என்று ராஜலட்சுமி சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளன..