ஐஸ்வர்யா நடித்த அட்வர்டைஸ்மென்டை பார்த்து வீட்டிற்கு வந்த மீடியா.. பளார் என்று அறைந்த கோடீஸ்வரி – ஆகா கல்யாணம் ப்ரோமோ

Aaha kalyanam serial promo : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடுகளில் ஐஸ்வர்யா குட்டியோண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு அட்வடைஸ்மெண்டில் நடிக்க போயிருந்தார். அங்கு அவருக்கு டைரக்டர் அசிஸ்டன்ட் எல்லோரும் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

பிறகு ஒரு பெர்ஃப்யூம் விளம்பரத்தில் நடித்த ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து டைரக்டர் உங்க நடிப்பு சூப்பர் இந்த விளம்பரம் கண்டிப்பா வைரல் ஆகும் என்று சொல்லி இருந்தார்.. பிறகு வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவின் டிரஸ்ஸை பார்த்து எல்லோரும் நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்ட..

உண்மையை சொல்லியே ஆகணுமா.. நடிகர் கார்த்தியின் பேச்சால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா.?

இப்படி டிரஸ் பண்ணிட்டு வெளியே போய் இருக்க என்று திட்டுகின்றனர் ஆனால் ஐஸ்வர்யா இது என்னோட ஃபேஷன் என் புருஷன தவிர யாரும் என்னை கேள்வி கேட்க கூடாது என்று பேசி இருந்தால்  கௌதமும் இதன் மூலமாக ஐஸ்வர்யாவை இந்த வீட்டை விட்டு எல்லோரும் சேர்ந்து துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் ஆஹா கல்யாணம் புரொமோ ஒன்று வெளியாகியிருக்கின்றன அதில் சூர்யா ஐஸ்வர்யா உடைய விளம்பரத்தை பார்த்து என்ன இது என்று முகம் சுளித்து மகாவிடம் சொல்கிறார். பிறகு மீடியா காரங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யாவிடம் பேட்டி எடுக்கின்றனர்..

BIGGBOSS 7 : வீட்டை விட்டு வெளியேறிய பிராவோ, அக்ஷயா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

அப்பொழுது விளம்பரத்துல ரொம்ப கிளாமரா நடிச்சு இருக்கீங்களே, உங்க வீட்ல ஏதும் சொல்ல மாட்டாங்களா இனிமேலும் கிளாமரா தான் நடிப்பீங்களா என்று கேள்வி கேட்கின்றனர்.. அப்பொழுது கோடீஸ்வரையும் தசாதரனும் அங்கு வருகின்றனர்.. பிறகு மகா மீடியா காரங்களிடம் இனிமே எதுவும் கேள்வி கேட்காதீர்கள் என்று ஐஸ்வர்யாவை உள்ளே கூட்டிட்டு போகிறார்..

எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் இருந்துகிட்டு இப்படி நடிச்சிருக்க இது நம்ம குடும்பத்துக்கே அசிங்கம் என்று ராஜலட்சுமி திட்ட ஐஸ்வர்யா எல்லோரும் சேர்ந்து என்னை கேவல படுத்துறீங்க இல்ல என்று பதிலுக்கு பேச உடனே கோடீஸ்வரி உள்ளே வந்து ஐஸ்வர்யா என ஓங்கி பலார் என்று கன்னத்தில் அடிக்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..