சூரியவம்சம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இந்த பிரபலம் யார் தெரியுமா? தற்பொழுது இவர் சீரியல் நடிகை..

Surya Vamsam: சூரியவம்சம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலம் குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். சமீப காலங்களாக தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வந்தாலும் தனது இளமை காலகட்டத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானார்.

அப்படி 1997ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றிலை பெற்ற திரைப்படம் தான் சூரியவம்சம். இந்த படத்தில் ஹீரோவாக சரத்குமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருந்தார். மேலும் ராதிகா, மணிவண்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.

பூர்ணிமாவிடம் வேலையை காமித்த காஜி தல.. ரொமான்ஸின் உச்சகட்டம்.. என்னடா நடக்குது இங்க?

இவ்வாறு இந்த படம் மட்டுமல்லாமல் இதில் இடம் பெற்றிருந்த ரோஜா பூ சின்ன ரோசாப்பூ பாடலும் 90s ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். இந்த பாடலில் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்திருந்தார் அவரின் சிறுவயது கதாபாத்திரத்தில் குறிப்பாக ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலில் நடித்திருக்கும் பெண் குறித்த தகவல்தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

surya vamsam
surya vamsam

அது வேறு யாரும் கிடையாது பிரபல சீரியல் நடிகை நிவாசினி திவ்யா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த தொடரில் மீரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சென்னையில் பிறந்து வளர்ந்த நிவாஷினி திவ்யா படிப்பை முடித்துவிட்டு 2013ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பான செல்லக்கிலி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

கார் ஷோரூம்க்கு வந்த ரவி, ஸ்ருதி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சூரியவம்சம் படத்தில் தான் நடித்த காட்சிவுடன் சேர்த்து ரிலீஸ் வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். இவர்தான் சூரிய வம்சம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவராக என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.