எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு விஜயகாந்துக்கு மட்டுமே நடந்த அதிசயம்.. சோகத்தில் மற்ற நடிகர்கள்

Vijayakanth : சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஆசை தன்னுடைய 100 வது படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே அது சாத்தியமாகி உள்ளது. அப்படி எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் மட்டுமே அது நடந்துள்ளது மற்ற நடிகர்களின் நூறாவது படம் தோல்வியை அடைந்துள்ளது.

அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 100 -வது படம் ஒளிவிளக்கு இந்த படம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வசூலை அள்ளியதோடு மட்டுமல்லாமல் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அறிமுகமான காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 100 வது படம் நவராத்திரி. இந்த படத்தில் சிவாஜியின் ஒன்பது வேடங்களில் நடித்திருந்தார் இந்த படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. விஜயகாந்தின் 100 வது படம் கேப்டன் பிரபாகரன் இந்த படத்தின் வெற்றியை நாம் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு பெரிய ஹிட் அடித்தது காலங்கள் கடந்த பிறகும் இந்த படத்தை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

மற்றபடி ரஜினியின் 100 வது படம் ஸ்ரீ ராகவேந்திரா இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளிவந்து வெற்றி பெறவில்லை. கமலின் 100 வது படம் ராஜபார்வை இந்த படத்தை அவரே தயாரித்து நடித்திருந்தார். மக்கள் மத்தியில் இந்த படம் பூர்த்தியை செய்தாலும் பல கோடி நஷ்டத்தை சந்தித்தது.  பிரபுவின் 100 -வது படம் ராஜகுமாரன் இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அடுத்த விதம் சரியில்லாததால் இந்த படம் தோல்வியடைந்தது..

தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

அதேபோல சத்யராஜ் 100 வது படம் பாரதியார் வீட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ஆக்சன் கிங் நடித்த 100 வது படம் மன்னவரு சின்னவரு சரியாக ஒடவில்லை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த தலைமகன் படமும் வெற்றி பெறவில்லை.. எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் நடித்த 100 வது படம் மட்டும்  ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.