யாருக்கு என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்.. விஜய்யை வைத்து படம் பண்ண மறுத்த பிரபல இயக்குனர்.! தொடரும் சோகம்

Vijay : தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக மாறி உள்ளார். இந்த ஆண்டு வெளியான வாரிசு, லியோ திரைப்படம் வெளிவந்து அதிக னார்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

யுவன்சங்கர் இசையமைகிறார். விஜய் உடன் இணைந்து லைலா, சினேகா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, விடிவி கணேஷ், அரவிந்த், அஜ்மல் அமீர், பிரேம்ஜி கங்கை அமரன், யோகி பாபு, மீனாட்சி சௌத்திரி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர். படத்தில் விஜய் இளமையான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜயின் கோட்டையான கேரளாவில் “லியோ” திரைப்படம் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விஜய் பற்றி பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய் சினிமா ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டாராம்.

இதனை அவர் தனது அப்பாவிடம் சொல்ல எஸ்ஏ சந்திரசேகர் உடனே பாரதிராஜாவை சந்தித்து விஷயத்தை கூறியுள்ளார் ஆனால் பாரதிராஜா விஜய் வைத்து இயக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் தளபதி விஜயையும் ரொம்ப வருத்தப்பட்டுள்ளார்.

ஸ்ருதி முன்னாடி மீனாவை ஒரு வேலைக்காரி போல வேலை வாங்கும் விஜயா.. யோவ் இயக்குனர் இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்

சில வருடங்கள் கழித்து பாரதிராஜா விஜயை பார்த்து உன்னை இயக்கியிருக்க வேண்டும் மிஸ் ஆனது எனக் கூற அதற்கு விஜய் ஆமாம் சார் எனக்கு அந்த நாள் நல்லாவே ஞாபகம் இருக்கு என சொன்னாராம் இதனை பேட்டி ஒன்றில் பாரதிராஜா கூறுகிறார்.