விஜயின் கோட்டையான கேரளாவில் “லியோ” திரைப்படம் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

Vijay : விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அப்படி இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் லியோ.

பல்வேறு தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தனர்.

ஸ்ருதி முன்னாடி மீனாவை ஒரு வேலைக்காரி போல வேலை வாங்கும் விஜயா.. யோவ் இயக்குனர் இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்

படம் ஆக்சன், எமோஷனல் என கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்தில் இருந்தே வசூல் வேட்டை நடத்தியது முதல் நாளே 140 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் ருத்ர தாண்டவம் ஆடியது இதனால் லியோ திரைப்படம் சுமார் 620 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றி விழா கூட பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.  லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கை கொடுத்து தளபதி 68 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் இளமையான தோற்றத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் வீட்டுக்கு வரணும்.. நலமுடன் இருந்தால் தோப்புக்கரணம் போடுறேன்.. கடவுளிடம் பிரார்த்தனை செய்த சிறுமி

அவருடன் இணைந்து 90ஸ் நடிகர், நடிகைகளான லைலா, சினேகா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயன் லியோ திரைப்படம் கேரளாவில் மட்டும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் கேரளாவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது விஜயின் கோட்டை கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.