அடேங்கப்பா இதுக்கெல்லாம் ஒரு கொண்டாட்டமா சிங்க பெண்ணே சீரியல் குழு நடத்திய அலப்பறை.!

Singapennae Serial: சன் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சீரியல் குழுவினர்கள் கொண்டாடி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது சன் டிவியின் சீரியல்கள். அப்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் சிங்க பெண்ணே இந்த நாடகத்தை பிரபாஸ் முத்தையா கதை எழுத, தனுஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

பொன் இளங்கோ, ஆனந்த் வேணு ஆகியோர்கள் டயலாக் எழுத சன் டிவி மற்றும் மிராக்கள் மீடியா இணைந்து சிங்கப்பெண்ணே சீரியலை தயாரித்து வருகிறது. விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில் ஹீரோயின் ஆக மனிஷா மகேஷ் நடித்து வருகிறார்.

அன்பரசன் என்ற கேரக்டரில் ஹீரோவாக அமல் ஜித் நடித்து வருகிறார் இரண்டாவது ஹீரோயின் ஆக மகேஷ் என்ற கேரக்டரில் தர்ஷன் கௌடா நடிக்க இவர்களைத் தொடர்ந்து விஜே பவித்ரா யோகலட்சுமி, ஜீவிதா, ஹர்ஷிதா, ஞானசம்பந்தம், ரமா, நிவேதா ரவி, அஞ்சு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இல்லதரசிகள் மட்டுமல்லாமல் இளம் ரசிகர்களையும் கவர்ந்து வரும் சிங்க பெண்ணே சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கியூட்டாக அழகாக இருக்கும் இந்த குட்டி குழந்தை தான் அஜித் பட நடிகை.! யார் என்று தெரிகிறதா.?

எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது வெற்றிகரமாக இந்த தொடர் 100 நாட்களை கடந்துள்ளது. எனவே இதனை குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்கள் மறுபுறம் ரசிகர்களும் சிங்கப் பெண்ணே சீரியல் குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.