ஏண்டா பொறந்தோம் என மன அழுத்தத்தில் சிக்கி தவித்த ஐந்து 80s நடிகைகள்.! வாழ்க்கையை பறிகொடுத்து நீக்கும் கனகா..

80s Tamil Actress: சினிமாவில் நடிகைகளை பொருத்தவரை அவர்களுடைய இளமை குறையும் வரை மட்டுமே தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களுக்கு பட வாய்ப்புகள் குறைவது வழக்கம் அப்படி பல நடிகைகள் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகியவர்களும் இருக்கின்றனர். அப்படி 80,90 காலகட்டத்தில் சினிமாவை கலக்கிய நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அவர்கள் குறித்து பார்க்கலாம்.

கனகா: கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கனகா இதன் மூலம் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்த சூழலில் கலிபோர்னியாவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காதலித்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கனகா அவரை திருமணம் செய்துக் கொண்டார்.

மருமகளாக நடித்து ரசிகர்களையே ஏங்க வைத்த நான்கு நடிகைகள்.! மகனுக்கு துரோகம் செய்து மாமனாரை கையில் போட்டுக் கொண்ட அமலாபால்.?

திருமணமான சில நாட்களிலேயே கணவர் காணாமல் போனதால் கனகா சினிமாவை விட்டு விலகி தற்பொழுது தனிமையில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது தற்பொழுது இவருடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஷோபா: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த ஷோபா இயக்குனர் பாலு மகேந்திராவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் செய்துக் கொண்ட சில வருடங்களிலேயே மன அழுத்தம் காரணமாக 1980ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

ஸ்ரீதேவி: கோலிவுட், பாலிவுட்டில் என மிகவும் பிசியாக இருந்து வந்த ஸ்ரீதேவி ரஜினி, கமல் ஆகியோர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் பிளாஸ்டிக் சர்ஜரி விவாகரத்து பெரும் பிரச்சனையினை ஏற்படுத்தியது. சர்ஜரி செய்திருப்பதாக பலரும் விமர்சிக்க ஸ்ரீதேவி மறுத்த போதும் இந்த பிரச்சனை முடிந்த பாடு இல்லை மேலும் ஸ்ரீதேவியின் மரணமும் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.

டேய் சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டா.! காதலருடன் கண்ணா பின்னான்னு ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்..

சில்க் ஸ்மிதா: கவர்ச்சி குயின் சில்க் ஸ்மிதா பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலிலாவது நடித்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ரசிகர்களும் விரும்பி பார்த்ததால் இவருக்கான மார்க்கெட் உச்சத்தில் இருந்தது இந்த சூழலில் மிகுந்த மன  அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

மனிஷா கொய்ராலா: பம்பாய், இந்தியன், முதல்வன் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மனிஷா கொய்ராலா சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இரண்டே வருடங்களில் இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் இதனால் மதுவுக்கு அடிமையான மனிஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் தற்பொழுது அதற்கான சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.