மருமகளாக நடித்து ரசிகர்களையே ஏங்க வைத்த நான்கு நடிகைகள்.! மகனுக்கு துரோகம் செய்து மாமனாரை கையில் போட்டுக் கொண்ட அமலாபால்.?

Tamil actress: சமீப காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் மருமகள்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நான்கு நடிகைகள் உள்ளனர். குறிப்பாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து தற்பொழுது இளசுகள் மத்தியில் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பவர் தான் நடிகை மிர்னா மேனன்.

திரிஷா: விஜய்-த்ரிஷா இருவரும் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடிகள் மீண்டும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களுடைய கூட்டணியில் லியோ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விஜய் திரிஷாவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தது. அதோடு விஜய்யின் தந்தையாக சஞ்சய் தத் நடித்திருந்தார். குடும்ப குத்துவிளக்காக சஞ்சய் தத்தின் மருமகளாகவே த்ரிஷா விளங்கினார்.

நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

மிர்னா மேனன்: தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த மிர்னா மேனன் தமிழில் பட்டதாரி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒருவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலமாகவில்லை ஆனால் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமானார். சூப்பர் ஸ்டார் விட்டு மருமகளாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்: தமிழ் சினிமாவிற்கு சக்கரவர்த்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் இதனை அடுத்து கீ, ஜாடா போன்ற படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமலின் மருமகளாக நடித்த பின் இவருக்கு  தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

கல்லாப்பெட்டியை நிரப்ப நயன்தாரா தயாரித்த 5 திரைப்படங்கள்.! ஆத்தாடி இந்த திரைப்படம் எல்லாம் வெளியில வந்துச்சா

அமலாபால்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான அமலா பால் இந்த படத்தில் கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் தகாத உறவில் இருக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். கேரக்டர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அழகான மருமகளாகவே காட்டப்பட்டார்.