ரஜினி கமலுடன் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையின் நிலைமை இதுதான்..

Actress Sri Priya: ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை ஸ்ரீபிரியாவின் தற்போது நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் இதன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

70,80 காலாக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீபிரியா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு நடிப்பது மட்டுமல்லாமல் பிறகு இயக்குவதையும் தொடர்ந்தார்.

“அமுல் பேபி” இவ்வளவு மோசமான வார்த்தையா.? தனுஷ் கேங்கை பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியிருக்கும் ஸ்ரீபிரியா தற்போது கமலின் மக்கள் நீதி மையத்தின் மைய குழுவினர் ஆவார். நடிகை ஸ்ரீபிரியா முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் தான் முதன்முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

actress sripriya
actress sripriya

இதன் மூலம் பிரபலமான இவர் கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். 70-80 இடைப்பட்ட காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீபிரியா தனது திரை வாழ்க்கையில் அதிகமாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன்  தான் நடித்துள்ளார்.

யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

அப்படி கிட்டத்தட்ட இருவருடனும் சேர்ந்து 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஒரே நடிகையாக ஸ்ரீபிரியா விளங்குகிறார். இவர் 1988ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.