அட, நடிகை ரதியா இது.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்தவரா இவர்.!

Actress Rati Agnihotri: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் அளவிற்கு நடிகைகளால் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடியாது குறிப்பிட்ட காலம் வரையில் நடித்துவிட்டு பிறகு என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் சினிமாவை விட்டு விலக வேண்டியதுதான். ஒரு சில நடிகைகள் கதாநாயகியாக இல்லை என்றாலும் தங்களுக்கு கிடைக்கும் கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

மேலும் சில நடிகைகள் சினிமாவை விட்டு விலகியவர்களும் இருக்கின்றனர். அப்படி 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை ரதி அக்னிஹோத்ரியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 80 காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரதி.

அடேய் புத்தாண்டுக்காக பொத்தி பொத்தி வைத்திருந்த அப்டேட்டை இப்படி லீக் பண்ணிட்டீங்களே.. தளபதி 68 புலம்பலில் வெங்கட் பிரபு..

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து உலகநாயகன் நடித்த உல்லாச பார்வைகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

Actress Rati Agnihotri
Actress Rati Agnihotri

தமிழை விட தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தான் ரதிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இவ்வாறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1985ஆம் ஆண்டு தொழிலாளர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சிம்புவும் நயன்தாராவும் போன்ல இப்படியா பண்ணுவாங்க.. நான் பார்த்து பதறிட்டேன் பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்..

இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார் அப்படி சமீபத்தில் ரதி தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர வைரலாகி வருகிறது. ரசிகர்களும் ரஜினிகாந்த், கமலுடன் நடித்த ரதியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Actress Rati Agnihotri
Actress Rati Agnihotri