800 படத்தின் திரைவிமர்சனம்.!

800 movie review : ஸ்ரீபதி இயக்கத்தில் மிதூர் மிட்டல் நடிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 800. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது அதற்கு காரணம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு என்பதால்தான்.

படத்தின் கதை :

இலங்கைத் மலையாக தமிழரான முத்தையா முரளிதரன் பல கலவரங்களுக்கு மத்தியில் தன்னுடைய கல்வியை தொடர்வது போல் படம் ஆரம்பிக்கிறது. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அதேபோல் உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவரையும் கவனத்தை ஈர்க்கிறார்.

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வனிதா.. “வைஜெயந்தி ஐபிஎஸ்” போஸ்டரை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

ஆனால் ஒரு சில இடத்தில் இவர் தமிழர் என்பதால் மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள் ஆனால் இவரின் அபார திறமையால் தேசிய அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முத்தையாவின் தேவையை உணர்ந்த தேசிய சர்வதேச போட்டி அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கிறார்கள். பிறகு எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதுதான் படத்தின் முழு கதையும்.

முத்தையா முரளிதரன் ஆக நடித்துள்ள மிதுர் மிட்டல் பல இடங்களில் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விடுகிறார் அந்த அளவு தன்னுடைய பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அப்பாவிடம் குறும்புத்தனம், பாட்டியிடம் பாசம், அம்மாவிடம் செல்லம், என சக போட்டியாளர்கள் கிண்டல், விளையாட்டில் குறை சொல்லும் பொழுது தவிப்பு என அனைத்து இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார்கள்.

மேலும் படத்தில் வேலராமமூர்த்தி, ஜானகி சுரேஷ், மகிமா நம்பியார், கீங்கிரத்தினம், நரேன், நாசர், யோகி ஜே பி சரத், மாஸ்டர் ரித்விக், ப்ரித்வி என பலரும் தங்களுக்கு கொடுத்த காட்சியை அற்புதமாக நடித்துள்ளார்கள். சில இடங்களில் முக்கிய காட்சிகளை காட்டாமல் அடுத்த கட்டத்திற்கு கதை நகர்ந்தது படத்திற்கு கொஞ்சம் பலவீனம்.

லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா.! குழப்பத்தில் ராகவா லாரன்ஸ் படக்குழு..

அதேபோல் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மிகவும் எதார்த்தமாக பிரமாண்டமாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். ஆர் டி ராஜசேகர் உலகில் பல கிரிக்கெட் மைதானங்கள் இலங்கையின் இயற்கை வளங்கள் என அனைத்தையும் தன்னுடைய கேமரா மூலம் காட்சிப்படுத்தப்பட்டு அழகாக திரைக்கு கொண்டு வந்துள்ளார்.

800 movie review latest
800 movie review latest

அதேபோல் பின்னணி இசை எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகாக கொடுத்துள்ளார் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார்கள் இயக்குனர் ஸ்ரீபதி இலங்கைக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் அவருடைய பங்கு எத்தகையது என்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் சினிமாவிற்காக கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகளையும் அழகாக இணைத்து திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களையும் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்