திருநங்கையாக நடித்து மிரட்டிய 5 தமிழ் நடிகர்கள்.. திரையரங்கில் கண்ணீரை வர வைத்த சரத்குமார்

மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க நடிகர்கள் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடிக்கிறார்கள் அப்படி அச்சு அசல் திருநங்கை போல் மாறி நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த 5 நடிகர்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

பிரகாஷ்ராஜ்  : பல மொழிகளில் வில்லனாக நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்த இவர் வசந்த் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் அப்பு இந்த படத்தில் பிரசாந்த், ஈஸ்வரி ராவ், தேவயானி, மோகன் சர்மா, ரமேஷ் கண்ணா, தாமு, காவேரி என பலர் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் திருநங்கை வேடம் அணிந்து நடித்திருப்பார். அவருடைய பாடி லாங்குவேஜ் மற்றும் அவருடைய கம்பீரமான முகபாவனை என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கியது.

Vijayakanth VS Kamal : 22 முறை நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்று யார் தெரியுமா.?

விக்ரம் : ரஜினி, கமலுக்கு அடுத்து எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்ற நடிக்க கூடியவர் விக்ரம் இவர் இருமுகன் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் இவருக்கு வரும் தீம் மியூசிக் ஒன்னும் அதிர வைக்கும் கிளைமாக்ஸ் வேற லெவலில் இருக்கும்.

விஜய் சேதுபதி : ஹீரோ, வில்லன், குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் விஜய் சேதுபதி இவர் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அப்படியே திருநங்கை போலவே நடித்து இருந்தார் படம் வெளிவந்து நன்றாக ஓடியது மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

நான் இல்ல.. நான் இல்ல.. வெளியே வந்து கத்திய விஜயகாந்த்! எமோஷனலாக சொன்ன நடிகை கஸ்தூரி

ஜெயம் ரவி : நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் இவர் ஆதி பகவான் திரைப்படத்தில்  திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர் மேக்கப் போடுவது இவருடைய ஃபைட்  சீன் ஒவ்வொன்றும் அந்த படத்தில் அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது.

சரத்குமார் : ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அழகாக நடித்துக் கொடுப்பவர். அப்படி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் இவர் திருநங்கை வேடம் அணிந்து நடித்திருப்பார்.  எமோஷனல் மற்றும் ஃபைட் சீன்களில் பின்னி பெடலெடுத்தார். ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.