முதல் படத்திலேயே “பெரிய ஹிட்” கொடுத்த 5 நட்சத்திரங்கள்.. ஆட்டோகிராப் வாங்க போன இடத்தில் ஹீரோவாக மாறிய நடிகர்

திறமையும், அழகு மற்றும் நேரமும் நமக்கு கை கொடுத்தால் நிச்சயம் வெற்றி தானாகவே வரும் அந்த வகையில் முதல் படத்திலேயே பெரிய வெற்றியை ருசித்த 5 நட்சத்திரங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1. பருத்திவீரன்  : 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்திவீரன் படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், காமெடி என கலந்திருந்ததால் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை அழ வைக்கும் கார்த்தி உடன் இணைந்து ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், சமுத்திரகனி, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். கார்த்தியின் முதல் படமே பெரிய வெற்றியை பதிவு செய்தது.

பருத்திவீரன் பஞ்சாயத்து : குடி வைத்த வீட்டிலேயே கொல்லி வைக்கலாமா.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கார்த்தியை வெளுத்து விட்ட சமுத்திரகனி..

2.  கிழக்கே போகும் ரயில் : 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் கிழக்கே போகும் ரயில் இந்தப் படத்தில் எம் ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமா உலகில் முதலில் என்ட்ரி கொடுத்தார்.மற்றவர்கள் டயலாக்கை சொல்ல அதை உள்வாங்கி அப்படியே நடித்தார். படம் 365 நாள் ஓடி வெற்றி கண்டது.

3. என் ராசாவின் மனசிலே  : 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் உருவானது படம் முழுக்க முழுக்க ஆக்சன் எமோஷனல் என கலந்து இருந்ததால் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கிரனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தன அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்தார்.

விசித்ராவை விட எனக்கு மோசமாக நடந்தது.! காதல் பட நடிகையை கசக்கி பிழிந்தது குறித்து அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!

4. நெஞ்சத்தை கிள்ளாதே  : 1980 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் மோகன் நடித்த திரைப்படம் . இந்த படத்தில் தன்னுடைய முழு திறமையும் மோகன் காட்டியிருப்பார் உடல் மொழி மற்றும் யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் படம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை ருசித்தது.

5. மண்வாசனை :  இந்த படத்தின் கதையை பாரதிராஜா எழுதி விட்டு ஹீரோவை தேடிக் கொண்டிருந்தாராம் நாள் இரவில் பாரதிராஜாவிடம் ஆட்டோகிராப் வாங்க பாண்டியன் வந்திருந்தாலும் அவருடைய முகவெட்டு ரொம்ப பிடித்துப் போகவே மண்வாசனை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தாராம். நடிகர் பாண்டியனுக்கு முதல் படம் பெரிய வெற்றியை ருசித்தது.