வடிவேலு பகைத்துக் கொண்ட 5 நட்சத்திர ஹீரோக்கள்.. தர்ம அடி வாங்கிய வைகைபுயல்

Vadivelu : கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு  காமெடி சீன்களில் பின்னி பெடலெடுத்து வருபவர் நடிகர் வடிவேலு. இவர் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து இவர் ரஜினி தொடங்கி இளம்  நடிகர்கள் வரை பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவர் நடித்த 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி என சொல்லிக்கொண்டே போகலாம் இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார். இப்படிப்பட்ட வடிவேலு ஒரு சில டாப் நடிகர்களை பகைத்துக் கொண்டு அவர்களுடன் நடிக்காமல் இருந்து வருகிறார் அவர்களைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

ராஜலட்சுமியின் பேச்சைக் கேட்டு பொம்மை போல் செயல்படும் குடும்பம்.. கதறும் மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

வடிவேலு –  பார்த்திபன் : 90களில் பல படங்களில் இணைந்து நடித்தனர் இவருடைய காமெடி காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் குண்டக்க மண்டக படத்தின் போது இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தது அதன் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவே இல்லை.

வடிவேலு –  தனுஷ் : தனுஷின் படிக்காதவன் படத்தில் முதலில் காமெடியனாக நடித்தது வடிவேலு தான் ஆனால் ஒரு  சீனில் சுமனின் காலை பிடிக்க வேண்டும்.  நான் பெரிய காமெடி நடிகர் என்னால் முடியாது என மறுப்பு தெரிவித்திருக்கிறார் இதனால் தனுஷுக்கும், இவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது அதன் பிறகு சேர்ந்து படம் பண்ணவில்லை.

ஆணவத்தால் மார்க்கெட்டை இழந்த நயன்தாரா.. 10 கோடி சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம்.? ஒரு கோடி கொடுக்க மனமில்லை

வடிவேலு – விக்ரம் : இவர்களுடைய காம்போவில் வெளிவந்த காமெடிகள் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கிறது அப்படி தான் கந்தசாமி படத்தில் இருவரும் வரும் காமெடி காட்சிகள் பின்னி பெடலெடுத்தன. ஆனால் இந்த படத்தின் போது விக்ரமை அவர் தாக்கி பேசியிருக்கிறார் அதன் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவே இல்லை.

வடிவேலு – அஜித் : இருவரும் இணைந்து ராஜா படத்தில் நடித்தனர் அப்பொழுது வடிவேலு அஜித்தை மரியாதையில்லாமல் பேசி இருக்கிறார் இது அஜித்திற்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

வடிவேலு –  விஜயகாந்த்  : வடிவேலுவை சினிமாவில் வளர்த்து விட்டவர்களில் முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். இப்படிப்பட்ட விஜயகாந்தை வடிவேலு பலமுறை தாக்கி பேசி இருக்கிறார் இதனால் கோபப்பட்ட விஜயகாந்த் ரசிகர்கள் வடிவேலுவை வெறுத்து வாங்கிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.