2023 – ல் உலகளவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படம்.. மாஸ் காட்டிய அஜித்

கடந்தாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து நாம் அதிகம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் கடந்த 2023 வெளியான படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்..

லியோ – 650 : தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான லியோ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லியோ திரைப்படம் 650 கோடி வசூல் ஈட்டி கடந்தாண்டில் தமிழில் அதிக வசூல் செய்த திரைப்பட லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வீடு தேடி போய் விஜய்யை கூப்பிட்ட விஜயகாந்த்.. கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை பரிசாக கொடுத்த தளபதி

ஜெயிலர் – 600 : இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மிர்னா மேனன், மோகன்லால், வசந்த் ரவி, விநாயகன் போன்றோர் நடித்திருந்தனர்.மேலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு தமன்னா கிளாமர் நடனம் ஆடி இருப்பார்.. இந்த படம் உலக அளவில் சுமார் 600 கோடி வசூலை ஈட்டி இந்த லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது..

பொன்னியின் செல்வன் 2 – 350 : மணிரத்தினம் இயக்கிய பொன்னியன் செல்வன் முதல் பாகம் 2022 இறுதியில் வெளியாகி வெற்றி பெற்றது அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 2023 ஆரம்பத்தில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது.. கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.. இந்த லிஸ்டில் பொன்னியன் செல்வன் 2 மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது.

2023 – ல் சிறந்த படங்கள்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட முழு லிஸ்ட்.. இடம் பிடிக்க தவறிய லியோ, ஜெயிலர்

வாரிசு – 310 கோடி : கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த திரைப்படமாக இருந்தது. 310 கோடி வசூல் செய்து இந்த படம் அதிக வசூலை ஈட்டிய தமிழ் திரைப்படங்கள் லிஸ்டில் நான்காம் இடம் பிடித்துள்ளது..

துணிவு – 250 கோடி : வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து அஜித் நடித்த இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார்.. இந்த படமும் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி 250 கோடி வசூல் செய்து இந்த லிஸ்டில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது..