விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த 5 நடிகைகள்.. கேப்டன் சொன்ன உண்மை!

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவருடைய மறைவுக்கு பிறகு விஜயகாந்த் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அப்படி விஜயகாந்த் பழைய பேட்டி ஒன்றில் தன்னுடன் நடிக்க மறுத்த நடிகைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.. கேப்டன் விஜயகாந்தை டாப் ஹீரோ என மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கதாநாயகிகள் அவரை ஒதுக்கியே வந்தனர்.

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

ஒருமுறை நடிகை ஸ்ரீபிரியாவுடன் விஜயகாந்த் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறது படக்குழு  மொத்தமும் ஊட்டி சென்ற பின் ஸ்ரீபிரியா மற்றும் வரவே இல்லை காரணம் கேட்டு கேப்டன் அதிர்ந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி ஸ்ரீபிரியா பாதியிலேயே படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

இவரைப்போல நடிகை ராதா, ஸ்ரீதேவி, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்  முதலில் நடிக்க ஒத்துக் கொள்ளாதவர்கள். அதிலும் குறிப்பாக சரிதா விஜயகாந்துடன் நடிக்க பிடிக்கவில்லை என சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

2000 பணம் கொடுத்து மீனாவை முழு வேலைக்காரியாக மாற்றிய ஸ்ருதி.. கோபத்தின் உச்சிக்கே சென்ற முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதேபோல விஜயகாந்த் சரிதாவிடம் உங்களுடன் நடிப்பதற்கு மறுத்துவிட்டார் என சொல்லி இருக்கிறார்கள் இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு விஜயகாந்த் சரிதா வீட்டுக்கு சென்று உண்மையை சொல்லி இருக்கிறார். இந்த நடிகைகள் விஜயகாந்த் உடன் அறிவிக்க மறுத்ததற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு அரசியல் சூழ்ச்சி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகைகள் ஒரு கட்டத்தில் மனம் இறங்கி நடிக்க ஓகே சொன்னாலும்  விஜயகாந்துடன் படம் பண்ணாதீர்கள் உங்கள் கேரியரே முடிந்துவிடும் பெரிய ஹீரோகளுடன் படம் பண்ண அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காது அந்த நடிகைகளை மிரட்டியதாக கேப்டன் சொல்லி இருக்கிறார்.