அஜித் படத்தில் நடித்து மார்க்கெட்டை இழந்த 5 நடிகைகள்.. வாழ்றதுக்காக எந்தவித ரிஸ்க்னாலும் எடுப்பேன் என சொன்ன நடிகை

தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் அஜித்துடன் நடித்த பிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய் உள்ளனர் அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு பார்ப்போம்..

ஹீரா  : ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார் அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்தார் அதன் பிறகு இருவரும் காதலித்து வந்தனர் அஜித் பொண்ணு கேட்க தர முடியாது என அதன் பிறகு ஹீரா வேறு ஒருவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

ரோகினி உன் மேட்டர் தெரிஞ்சா உன் நிலைமை என்ன தெரியுமா.? இந்த சின்ன பொய்க்கே இந்த ஆட்டம் ஆடுற…

மானு : காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் மானு இந்த படத்தில் அவர் வரும் காட்சி மற்றும் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. சினிமாவில் சிறப்பாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் காணாமல் போனார்.

பிரியங்கா உபேந்திரா  : ராஜா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பிரியங்கா.. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த பிரியங்கா திடீரென கன்னட டாப் நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

100 வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா.. கேமரா முன் நிக்சனை பற்றி என்ன சொல்ல போகிறார் தெரியுமா.?

வசுந்தரா தாஸ்  : அஜித்தின் சிட்டிசன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த படத்தில் அவர் வாழ்றதுக்காக எந்தவித ரிஸ்க்னாலும் எடுப்பேன் என கூறுவார். அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது  இந்த படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை..

கனிகா : தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் கொடி கட்டி பறந்தவர் கனிகா. அஜித்தின் வரலாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் டப்பிங் பணியாற்றி வந்த இவர் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.