2023 – ல் சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்திய 5 நடிகர்கள்..! விஜய்யை முந்திய வாரிசு நடிகர்

இந்த 2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடைய உள்ளது.. அதனால் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைகள் சிறந்த படம் என பல்வேறு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் இந்தாண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலவர்ஸ்களை வைத்திருக்கும் டாப் 5 தமிழ் நடிகர்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.

1. சிம்பு : நடிகர் சிம்பு கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்பொழுது தனது 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டின் கணக்கின்படி இவர் இன்ஸ்டாகிராமில் 12.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டு முதலிடத்தில் இருக்கிறார்.

டைரக்டர் எடுத்த முடிவால்.. ரவி கிருஷ்ணாவுக்கு விழுந்த செருப்படி.. அந்த நடிகைக்கு தில்லு ஜாஸ்தி தான்

2. விஜய் : நடிகர் விஜய் அன்னையில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ஆனால் அவர் அக்கவுண்ட் ஓபன் செய்த சில மணி நேரங்களிலேயே எண்ணற்ற ஃபாலோவர்ஸ்கள் வந்து குவிந்தனர் அதன்படி நடிகர் விஜய் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

3. சூர்யா : கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் சூர்யா சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவருக்கு மொத்தம் இன்ஸ்டாகிராமில் 8.2  மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கின்றன.

Vidaamuyarchi : காதும், காதும் வச்ச மாதிரி வேலையை முடித்த அனிருத்.. வெளிவந்த சூப்பர் அப்டேட்!

4.  விஜய் சேதுபதி : தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.. இவருக்கு இன்ஸ்டாகிராமில் மொத்தம் 7.9  மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.

5. தனுஷ் & சிவகார்த்திகேயன் : நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள்.. தொடர்ந்து சினிமாவில் பல்வேறு படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இருவருமே சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.. இன்ஸ்டாகிராமில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே 6.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.