தீபாவளி ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் திரைப்படங்கள்.! உற்சாகத்தில் ஓடிடி ரசிகர்கள்

Tamil OTT Movie: வாரம் தோறும் தொடர்ந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது இவ்வாறு திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஓடிடி-யில் வெளியாகுவது வழக்கம். அப்படி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் வெளியாகும் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த வாரம் கார்த்தி நடித்த ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா மற்றும் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு  ஆகிய திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடியில் நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய கேப்டன் விஜயகாந்த்.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படம் ‘தி ரோடு’.  இந்த வாரம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய வெப் தொடரான ‘லேபிள்’ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதனை அடுத்து ஷாட் பூட் த்ரி என்ற படம் அமேசான் பிரைமிலும் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்களில் வெளியாகிய ஷாட் பூட் த்ரி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு கிடைத்தது.

உண்மையை வெளிப்படுத்தி கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்திய தமிழ்.! உன்ன போய் நம்புனனே அர்ஜுன்.. நீயா இப்படி பண்ணுனது கடுங்கோபத்தில் ராகினி.!

இதனை அடுத்து புலிக்கொத்தி பாண்டி என்ற படம் அமேசானில் வெளியாக உள்ளது. இப்படத்தினை முத்தையா இயக்க விக்ரம் பிரபு, லட்சுமிமேனன், சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவ்வாறு இந்த நான்கு தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து வாலாட்டி என்ற மலையாள படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி-ல் வெளியாக உள்ளது.