கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. ஒரே படத்தில் இரண்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட மூன்று நடிகர்கள்..

2 Heroines vs 1 Hero: ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் என்றாலே தற்பொழுதெல்லாம் படங்களை பார்க்க முடியவில்லை இந்த சூழலில் இரண்டு ஹீரோயின்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட டாப் 3 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

கார்த்தி: 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மூவரும் இணைந்து நடித்தனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஆசதான் பாடலில் ஆண்ட்ரியா மற்றும் ரீமா சென்னுடன் இணைந்து கார்த்தி செம குத்தாட்டம் போட்டு இருப்பார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

சிம்பு: சிலம்பரசன் இயக்கிய வல்லவன் திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது இப்படத்தில் ஹீரோவாக அவரே நடிக்க நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் மற்றும் எஸ்.வி சேகர் ஆகியோர்கள் இணைந்து நடித்தனர்.

இப்படத்தில் இடம்பெற்ற எம்மாடி ஆத்தாடி பாடலில் நயன்தாரா மற்ற ரீமா சென்னுயுடன் இணைந்து சிம்பு ஆடி இருப்பார். அதோடு மட்டுமல்லாமல் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் இடம்பெற்ற எனக்கு ரெட் காடு பாடலில் கேத்தரின் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் உடன் இணைந்து மஜாவாக ஆடியிருப்பார்.

என்னதான் இயக்குனராக இருந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்ட 5 இயக்குனர்கள்.!

கமல்ஹாசன்: கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான தெனாலி திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி போன்றவர்கள் இணைந்து நடித்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அத்தினி சித்தினி என்ற பாடலுக்கு தேவயானி ஜோதிகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார். அதோடு மட்டுமல்லாமல் பஞ்சதந்திரம் படத்தில் வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் பாடலிலும் சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உடன் இணைந்து நடனமாடி இருப்பார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்