2024ல் மிரட்ட போகும் டாப் 10  நடிகர்களின் திரைப்படங்கள்.! அஜித் முதல் விக்ரம் வரை எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா.?

2024 Upcomming big tamil movies: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் 2024ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 10  நடிகர்களின் திரைப்படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

10. மகாராஜா: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இவருடைய 50வது படமான மகாராஜா.

9. விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்றெடுத்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு விரைவில் வெளியாக உள்ளது.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

8. தனுஷ் 50: தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி தானே நடித்து வருகிறார். எனவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

7. கங்குவா: நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தை சிவா இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பாட்னி நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

6. தக் லைஃப்: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்திற்காகவும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

5. தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்தின் போஸ்டர்கள், டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

4. வேட்டையன்: ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

3. இந்தியன் 2: இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போனாலும் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

2. விடாமுயற்சி: துணிவு படத்தின் வெற்றினை தொடர்ந்து அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த வருடமே விடாமுயற்சி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

1. கோட்: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளார். எனவே விஜய்யின் கடைசி படங்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.