2023- ல் புதிதாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகைகள்..

Tamil Actress: கொரோனா பிரச்சனைக்கு பிறகு இந்த ஆண்டுதான் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் அறிமுக இயக்குனர்களாக அறிமுகமானவர்களின் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்று கொண்டாடப்பட்டதையும் பார்த்தோம். அந்த வகையில் 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு புதிதாக அறிமுகமான நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

1. ப்ரீத்தி அஸ்ராணி: வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு வெளியாகி வெற்றினை பெற்ற அயோத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ப்ரீத்தி அஸ்ராணி. சன் டிவி தொலைக்காட்சியில் மின்னலே என்ற சீரியலில் நடித்து வந்த இவர் இதனை தொடர்ந்து அயோத்தி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.

கஜினி படத்தில் அஜித்.. சஞ்சய் ராமசாமியாக மிரட்டறாரே.. முருகதாஸ் வைத்த டிமாண்ட் இதுதானா.?

2.மீனாட்சி சவுத்ரி: தெலுங்கு திரைவுலகில் பிரபலமாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

3.சானியா ஜயப்பன்: மலையாள திரைப்பட நடிகையான சானியா ஐயப்பன் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இந்த படத்தினை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான இறுகப்பற்று படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

4. ராதிகா ப்ரீத்தி: சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராதிகா ப்ரீத்தி சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற 80ஸ் பில்டப் படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

5.நிமிஷா சஜயன்: மலையாள நடிகையான இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நிமிஷா சஜயன் தமிழில் சித்தா மற்றும் ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. ஹீரோ இவரா.? வெளியான அறிவுப்பு

6. திவ்யன்ஷா கௌஷிக்: தெலுங்கு நடிகையான திவ்யன்ஷா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மாடலிங் அழகியாக இணையதளத்தை கலக்கி வரும் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான மைக்கேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள டக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7.சஞ்சனா திவாரி: மாடலிங் அழகியான சஞ்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். வாரிசு பாடத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

8.சம்யுக்தா மேனன்: மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு என இந்த ஆண்டு இரு மொழிகளிலும் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

9. காவியா தாபர்: நடிகையும், மாடல் அழகியமான காவியா தாபர் குறும்படங்களில் நடிக்க தொடர்ந்தார் அப்படி ஹிந்தி, தெலுங்கு என நடித்து வந்த இவர் தமிழில் இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

10. மிர்னா மேனன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மிர்னா மேனன்.