மீண்டும் கடை பெயரில் புதிய சீரியல்.! ஜீ தமிழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… விஜய் டிவியை காப்பி அடிப்பாங்களோ

Zee Tamil New Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ரசிகர்களின் பேர் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்ததை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிப்பரப்பாகி வருகிறது. இதனை அடுத்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து கடையின் பெயரில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

டிஆர்பியில் தொடர்ந்து சன் டிவியின் சீரியல்கள் முதல் ஐந்து இடத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் எப்படியாவது டிஆர்பியில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றவரும் விஜய் டிவி சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

தமிழுக்கு தரமான அடி கொடுத்த அர்ஜுன்..! ஜெயிலில் கம்பி என்னும் சரஸ்வதி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்..

குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஜீ தமிழில் சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த சீரியலில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரை வைத்து இந்த சீரியல் துணிக்கடையை மையமாக வைத்து ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் நாயகியாக நடிகை வைஷ்ணவி நடிக்க இருக்கிறார் இவர் பேரன்பு தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் சிபு சூரியன் நடிக்க உள்ளார் இவர் ரோஜா, பாரதி கண்ணம்மா ஹிட் தொடர்களில் ஹீரோவாக நடித்தவர்.

டாப் 3 இயக்குனர் படத்தில் நடித்த அஜித் விஜய்.! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..

மேலும் மகராசி, சில்லுனு ஒரு காதல், ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்த நடிகர் நவீன் இவர்களுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.