உன்கிட்ட அழகும், திறமையும் இருக்கு.. 27 வருடங்களுக்கு முன்பே அஜித்திடம் சொன்ன பிரபல வில்லன் நடிகர்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை  மையமாக வைத்து கதை உருவாக்குவதால்  இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு புனேவை நோக்கி நகர்ந்து உள்ளது இது இப்படி இருக்க அஜித் சினிமா ஆரம்பத்தில் நான் நல்ல நடிக்கிறேனா.. பெரிய ஆளாக  வந்து விடுவேனா என்ற தயக்கம் அவரிடமே இருந்தது ஆனால் ஒரு நடிகர் அஜித்தை பார்த்து நீ நல்லா நடிக்கிற நீ பெரிய நடிகனா வருவ என கொஞ்சம் கொஞ்சமாக பேசிய அவரை தேற்றி உள்ளார்.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நடிகர் அஜித் ஆரம்பத்தில் என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் தலை காட்டினார் அதன் பின் இவர் அமராவதி, பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற பல்வேறு படங்களில் ஓடிக்கொண்டிருந்தார் அந்த சமயத்தில் தான் வசந்த இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவானது ஆசை இந்த படம் அஜித் கேரியரில் மிகப் பெரிய ஒரு டைமிங் பாயிண்டாக இருந்தது.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தின் ஷூட்டிங் போது பிரகாஷ்ராஜிடம் நான் நன்றாக நடிக்கிறேனா என அவ்வபொழுது கேட்டுக்கொள்வாராம் மேலும் நான் மிகப்பெரிய ஒரு ஸ்டாராக வருவேனா என கேட்பாராம் அதற்கு பிரகாஷ்ராஜ் நீ  பெரிய சூப்பர் ஸ்டாராக வரவேண்டிய அனைத்து தகுதிகளும் உனக்கு உன்னிடம் இருக்கு என கொஞ்சம் கொஞ்சமா தேற்றி உள்ளார்.

ஆனால் ஆசை படத்தில் பிரமாதமான நட்பை விதிப்படுத்தி இருப்பது அஜித்தை விட பிரகாஷ்ராஜ் தான். பிறகு பிரகாஷ் ராஜ்  சொன்னதை நம்பி அவரும் தன் மீது நம்பிக்கை வைத்து  திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டு அடுத்தடுத்த படங்களில் எனது முழு திறமையையும் வெளிக்காட்டி வெற்றியை ருசிக்க ஆரம்பித்தாராம்.