உலக அளவில் வலிமை திரைப்படம் : 5 நாட்களில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான தமிழ் சினிமா.

valimai
valimai

அஜித் தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் சமீப காலமாக மக்கள் மற்றும் பொதுமக்களை கவரும் படியான கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை திரைப்படங்களை தொடர்ந்து அந்த லிஸ்டில் இணைந்துள்ளது தான் அஜித்தின் வலிமை.

இப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். முதல் மூன்று நாட்களில் வலிமை படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய நிலையில் தற்போது பெண்கள் வலிமை திரைப்படத்தை தலையில் தூக்கிவைத்து ஆட்டம் ஆடுகிறார்கள் காரணம் அந்த அளவுக்கு அம்மா சென்டிமென்ட் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கான வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது இதனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் ஆகியோர் வசூல் சாதனையை முறியடித்து முன்னேறிக் கொண்டே போகிறது அஜித்தின் வலிமை.

இதனால் அவரது சினிமா கேரியர் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. வலிமை படம் 3 நாட்களில் 100 கோடியை அள்ளிய நிலையில் வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் மட்டுமே சுமார் 150 கோடியை அள்ளிய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளுக்கு நாள் வலிமை படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போவதால் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகி கொண்டே போகிறது இதனால் வருகின்ற நாட்களிலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என சினிமா பிரபலங்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

தமிழில் தாண்டி அஜித்தின் வலிமை திரைப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய வற்றிலும் வெளியாகி நல்ல வரவேற்பை கண்டு வருகிறது இதனால் வலிமை திரைப்படம் சுமார் 300 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.