அரசியலுக்கு ஏன் வந்தீங்க… மாணவியின் கேள்விக்கு கேப்டன் கொடுத்த பதில்.. அரங்கமே கை தட்டிய சம்பவம்

Vijayakanth : தொட்ட எல்லாத்தையும் வெற்றியை மட்டுமே கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இவர் மதுரையில் மிகப்பெரிய ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்தார் ஆனால் சினிமாவின் மீது இருந்தா காதாலால் சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டு பட வாய்ப்பை கைப்பற்றினார்.

ஹீரோவாக ஆன பிறகு கிராமத்து கதையும் உள்ள படங்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தார் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்திற்கு விஜயகாந்த் சென்றார். இப்படிப்பட்ட விஜயகாந்த் மிக எளிமையாக இருந்து கொண்டு திரை உலகில் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் பல உதவிகளை செய்தார் இதேபோல மக்களுக்கும் உதவி செய்தார்.

எப்பவுமே இப்படித்தானா.? கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

இப்படிப்பட்ட விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு முழு அரசியல்வாதியாக மாறினார். அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டார் அப்பொழுது ஒரு மாணவி விஜயகாந்த் பார்த்து கேள்வி கேட்டார் அதாவது அரசியலுக்கு நீங்கள் வந்ததே அதன் மூலம் பிரபலமடைவதற்காகதானா என்று  கேள்வி எழுப்பினார் மாணவி..

உடனே விஜயகாந்த் சினிமாவிலேயே நான் மிகவும் பிரபலமானவன் இனி அரசியலுக்கு வந்து தான் நான் பிரபலமாக வேண்டுமா.? மேலும் சினிமாவில் இருந்த போது என்னை அனைவரும் புகழ்வார்கள் எனக்கு நிறைய நல்ல பெயர்கள் இருந்தன ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு என்னை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் அரசியலுக்கு வந்தது எனது புகழுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தி உள்ளது.

2023 : சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்த 5 திரைப்படங்கள்.! சின்ன வைரம் தான் பெரிய விலைக்கு போகும்

மக்களுக்கு நன்மைகள் செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன் அதை நீங்கள் இப்போதே செய்யலாமா என நீங்கள் கேட்கலாம் அது உண்மை தான்.. இப்பொழுது நான் நினைத்தால் என் சக்திக்கு ஒரு 10 பேரை படிக்க வைக்க முடியும் ஆனால் தமிழ்நாட்டில் படிப்பில்லாமல் இருக்கும் அனைவரையும் என்னால் படிக்க வைக்க முடியாது அதற்கு எனக்கு அதிகம் தேவை எனவே நான் அரசியலுக்கு வர நினைக்கிறேன் என ஒரு சிறப்பான பதிலை அளித்துள்ளார் கேப்டன் இதற்கு  அந்த கூட்டமே கைதட்டியது.