விருமன் மக்கள் விமர்சனம்.!

இயக்குனர் முத்தையா கார்த்தி நடித்துள்ள திரைப்படம் தான் விருமன் இந்த படத்தில்  கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கம் விருமன் படத்தில் அதிதி சங்கர் பாடிய  ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது அந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி தான் பாட இருந்ததாம் ஆனால் என்ன காரணம் என்று தெரியாமல் அதிதி சங்கரையே பாட வைத்துள்ளார்கள் இதனால் ராஜலட்சுமி மன அழுத்தத்தில் உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் விருமன் படம் இந்த மாதம் 12ஆம் தேதி வெளியாக இருந்தது அதேபோல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து விட்டு  பாசிட்டிவான கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளார்கள் என்றும். அதிதி சங்கருக்கு இது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அவருடைய நடிப்பு நன்றாக உள்ளது என்றும் அவருடைய நடனங்களும் நன்றாக உள்ளது என்றும் ரசிகர்கள்.

மேலும் இப்படத்தில் முன்பெல்லாம் அப்பாக்கள் தான் மகன்களை வழி நடத்துவார்கள் ஆனால் இந்த படத்தில் மகன்தான் அப்பாவை வழிநடத்தி செல்கிறான் என்பது போல் கதை அமைந்ததாக கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த படம் பருத்திவீரன் மற்றும் கொம்பன் படம் சாயலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் முத்தையா அவர்கள்.  தனது முதல் படத்திலேயே தனித்துவமான திறமையை காட்டி அதிதி சங்கரை புகழ்ந்து பேசி உள்ளனர். அதாவது அவர் பாடலும் சரி , அவருடைய நடிப்பும் மற்றும் நடனமும் வெகுவாகவே ரசிகர்களை கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

முழு விமர்சனத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment