விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பே நான்கு சாதனைகள் படைத்திருக்கும் நிலையில் அது குறித்து தற்பொழுது பார்க்கலாம். அதாவது விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு வியாபாரத்தில் புது சாதனை படைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார்.
மேலும் இவரைத் தொடர்ந்து சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மதுசூதன் ராவ் என வில்லன் பட்டாளமே நடித்து வருகிறது. தற்பொழுது லியோ படத்தில் இறுதி கட்டப்படப் பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்படி விஜய்யின் படத்திற்கு தியேட்டர்களில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களிலும் மிகப்பெரிய வரவேற்புகள் உள்ளது.
அந்த வகையில் லியோ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை ரூபாய் 120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றிருக்கிறது. இவ்வாறு சில மாதங்களாக லோகேஷ் கனகராஜ் லியோ குறித்து எந்த அப்டேட்டும் வெளியில் விடாத காரணத்தினால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் லியோவின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் ரூபாய் 80 கோடிக்கு வாங்கிவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லியோ படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கும் நிலையில் அதில் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். அப்படி லியோ படுத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலைகளில் லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை ரூபாய் 120 கோடிக்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் லியோ படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமம் ரூபாய் 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாட்டில் அதிக விலைக்கு விற்பனையான தமிழ் படம் லியோ திரைப்படம் தான் எனவும் கேரளா தியேட்டர் உரிமம் ரூ 16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.