சாதனை நாயகன் : விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது

Vijayakanth : கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் இவர் நேற்று உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து  தீவு திடலுக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்படுகிறது பொதுமக்கள் பார்த்த பின் மாலை 4 : 45 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகின்றன.

விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய புகழ் காலம் கடந்த பிறகும் பேசப்படும் இந்த நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர் அதிரடி ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 315 நாட்கள் ஓடி பெரிய சாதனை படைத்தது.

பூந்தோட்ட காவல்காரன் விஜயகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத புகைப்படம்

1991 ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன் இந்த படம் அவருக்கு 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டில் இருக்கும் வீரபத்திரனை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை படம் அதிரடி ஆக்சன், மாஸ் டயலாக் எமோஷனல் என அனைத்தும் இருந்ததால்  300 நாட்கள் ஓடி சூப்பர் ஹிட் அடித்தது.

1991 மாநகர காவல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார் படத்தில் ஸ்டண்ட் கட்சிகள்  ஒவ்வொன்னும் மிரட்டலாக இருக்கும் படம் 230 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 1990 ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் புலன் விசாரணை. படம் அதிரடி ஆக்சன் கலந்த படமாக இருந்தால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 220 நாட்கள் ஓடியது.

உன்னால தான் என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சு.. மருமகள் முன்னாடி விஜயாவை திட்டிய பாட்டி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

1988 விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் ராதிகா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருப்பனர் படம் 180 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. 1984 வைதேகி காத்திருந்தாள் 175 நாட்கள், 2002 ரமணா 150 நாட்கள், 1994 சேதுபதி ஐபிஎஸ் 150 நாட்கள், 2000 வல்லரசு 112 நாட்கள், 1986 அம்மன் கோயில் கிழக்காலே 175 நாட்கள், 1989 பாட்டுக்கு ஒரு தலைவன் 175 நாட்கள், 1994 என் ஆசை மச்சான் 175 நாட்கள், 1986 ஊமை விழிகள் 200 நாட்கள், 2000 வானத்தைப்போல 175 நாட்கள், 1988 செந்தூரப்பூவே 186 நாட்கள்.