பூந்தோட்ட காவல்காரன் விஜயகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத புகைப்படம்

Captain Vijayakanth Parents Photo: மறைந்த நடிகர் விஜயகாந்தின் அம்மா அப்பா புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காய்ச்சல், சளி, இரும்பல் போன்ற தொந்தரவுகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து இவருடைய உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இன்று கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் தலைவர் 171 மற்றொரு பக்கம் லியோ 2 .. மேடையிலேயே அணுகுண்டை வீசிய லோகேஷ் கனகராஜ்..

பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வந்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். விஜயகாந்த் தனது 71வது வயதில் மறைந்துள்ளார். நடிகர் விஜயகாந்த் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் படங்களில் நடிக்க தொடங்கினார்.

captain vijayakanth
captain vijayakanth

ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு பல அவமானங்களையும் பல தடைகளையும் சந்தித்த நிலையில் ஒரு கட்டத்தில் இவருக்கென மக்கள் உருவாக இதன் மூலம் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் அம்மா, அப்பா புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

captain vijayakanth father
captain vijayakanth father

அதில் ஒரு புகைப்படத்தில் தனது தாய் மற்றும் சகோதரருடன் விஜயகாந்த் இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் விஜயகாந்த் தனது தந்தையின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இவ்வாறு யாரும் பார்த்திராத இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.