என் வாழ்க்கையை திருப்பி போட்ட 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள் – பழசை மறக்காத விஜயகாந்த்

Vijayakanth : 90 களில் முன்னணி நடிகராக வந்தவர் விஜயகாந்த்.  இவருக்கு போட்டியாக ரஜினியும், கமலும்  பல படங்களை கொடுத்து  ஓடிக்கொண்டிருந்தனர் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல்வேறு கிராமத்து கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், செந்தூரப்பூவே..

வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, சின்ன கவுண்டர் போன்ற பல்வேறு படங்களில் நடித்து கிராமப்புற மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இவரும் முன்னணி நடிகராக மாறினார்.. பிறகு விஜயகாந்திற்கு என்று அங்கங்கே தனி ரசிகர்கள் மன்றமும் உருவாகின. ரசிகர்களின் வரவேற்பை பார்த்து விஜயகாந்த் அரசியலிலும் களம் இறங்கி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

அதிக ரிஸ்க் எடுப்பார்.. அஜித்துக்கு கோபம் வந்தா.? பிரபல நடிகர் சொன்ன தகவல்

பிறகே சினிமாவை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் தற்பொழுது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த தகவல்கள்  கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றன..

இந்நிலையில் ஒரு முறை ஊடகங்களில் பேசும் பொழுது விஜயகாந்த் நான் சினிமாவில் நடிக்க தொடங்கி ஆரம்பத்தில் என்னுடன் நடிக்க பல நடிகைகள் மறுத்தனர் இருந்தும் அம்பிகா மற்றும் ராதிகா இருவரும் என்னுடன் பல படங்களில் நடித்திருக்கின்றனர்.. மேலும் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ராம நாராயணன் இரண்டு இயக்குனர்களும் அவர்களது படங்கள் மூலம் என்னை பிரபலப்படுத்தினர்.

சும்மா கிடந்த சங்கை ஊதி பார்த்தது ஒரு குத்தமா.. சூர்யாவின் பேச்சால் கடுப்பான வெற்றிமாறன்.. கேள்விக்குறியாகும் வாடிவாசல்

இவர்கள் என் சினிமாவில் மிக முக்கியமானவர்கள் என்று பேசியிருந்தார்.. விஜயகாந்த் வைத்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டு அறை படமும் ராமநாராயணன் இயக்கிய சிவப்பு மல்லி படமும் விஜயகாந்த் கேரியரில் ஒரு திருப்புமுனை படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..