என்னை பார்க்க இங்க வராதே.? நீயும், நானும் அப்படியா பழகினோம்.. பிரபல நடிகரை பார்த்து சொன்ன விஜயகாந்த்

Vijayakanth : திரையுலகில் ஹீரோ, ஹீரோயினையும் தாண்டி  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் குணச்சித்திர நடிகர்களையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள் அப்படித் தான் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து காமெடியனாக குணசித்திர கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்துள்ளார்.

இப்பொழுது கூட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி எம்.எஸ். பாஸ்கர் பேசி உள்ளார் அவர் சொன்னது.. எந்த கார் வாங்கினாலும் முதலில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று..

2023ல் ரசிகர்களை உலுக்கிய 5 மரணச் செய்தி.. மாரிமுத்துவுக்கு முன்பே இத்தனை பேரா..

அவரை முதலில் உட்கார வைத்து அதன் பிறகு  விஜயகாந்த் கையால் சாவியை வாங்கிய பிறகு காரை ஓட்டுவாராம் அந்த அளவுக்கு விஜயகாந்த் மீது மிகுந்த பற்றும் , பாசமும் கொண்டவராக பாஸ்கர் இருந்தார். ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பு என்றும் அவர் என் அண்ணன் இல்லை ஒரு அம்மா என்றும் கூறினார் ஆரம்ப காலங்களில் இருவரும் அருகருகே படுத்துக் கொண்ட அனுபவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்றும் கூறினார்.

அப்படிப்பட்டவரை இப்பொழுது பார்க்க அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். கிட்டத்தட்ட 6 வருடமாகிவிட்டதாம் விஜயகாந்தை பார்த்து அவர் நல்ல உடல் நிலையில் இருக்கும் போது கட்சி அலுவலகத்திற்கு சென்றாராம் பாஸ்கர். உடனே விஜயகாந்த் இங்கெல்லாம் வரக்கூடாது பார்க்க வேண்டும் என்றால் வீட்டுக்கு வா..

ஷாலினி பேச்சை கேட்ட அஜித்..! பைக்கை தொடாததற்கு காரணம் இதுதானா.?

இந்த அரசியல் வாடை, கட்சி எல்லாம் உனக்கு செட்டாகாது கட்சியில் சேர வேண்டாம் என்று நினைக்காதே என பாஸ்கருக்கு அறிவுரை வழங்கினாராம் விஜயகாந்த்.. தான் கூட இருப்பவர்களை எப்பொழுதுமே  தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ளும் இந்த காலத்தில் விஜயகாந்தின் அந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.