vijayakanth mandapam : கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நடிகனாக மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் ஆவார் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்துள்ளார். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை இறந்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் வாழும்போதே கொடைவள்ளலாக வாழ்ந்தவர் விஜயகாந்த்.
இல்லை என்று வருபவர்களுக்கு வாரி வாரி வழங்கியவர். இப்படி கொடை வள்ளலாக வாழ்ந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார் இவர் மரணமடைந்ததை சினிமா பிரபலங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இவரின் மரணம் இருந்தது அந்த அளவு சினிமா பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்கள்.
கமலின் “இந்தியன் 2” உரிமத்தை வாங்கிய பிரபல ஓடிடி, தொலைக்காட்சி.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்
இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு சொந்தமாக மண்டபம் இருக்கிறது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் அந்த பகுதியில் மிகப்பெரிய டிராபிக் ஜாம் ஏற்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்தது திமுக அரசு அந்த மேம்பாலம் இருக்கும் இடத்தில் தான் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர்கல்யாண மண்டபம் இருந்தது. ஆனால் கல்யாண மண்டபம் இடையூறாக இருப்பதாக கூறி அதன் பாதியை இடித்துவிட்டு இடத்தை கைப்பற்றினார்கள்.
மிகப்பெரிய மண்டபமாக இருந்த அந்த மண்டபம் தற்பொழுது பாதியாக இருக்க காரணம் அதுதான் உடனே அதனை தேமுதிக அலுவலகமாக மாற்றினார் விஜயகாந்த்.அந்த மண்டபத்தை இடிக்கப்பட்ட அந்த பகுதி பல கோடி விலைக்கு போகுமாம் ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு வெறும் ஏழு கோடிகள் தான் கொடுத்தார்களாம்.
ஆனால் அதைப் பற்றி விஜயகாந்த் கொஞ்சம் கூட கவலை இல்லை என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது தற்பொழுது..