கேப்டன் விஜயகாந்த் வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 முன்னணி நடிகர்கள்..

Captain Vijayakanth: நடிகர் விஜயகாந்த் சினிமாவில் வளர்த்து விட்டு அழகு பார்த்த ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருப்பதனால் பல அவமானங்களை சந்தித்தார். எனவே தன்னை போல யாரும் சினிமாவில் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலருக்கும் விஜயகாந்த் உதவி செய்துள்ளார் அப்படி விஜயகாந்த்தால் சினிமாவில் பிரபலமான ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

செந்தில்: நடிகர் செந்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நிலை திடீரென மார்க்கெட் இழந்தார் பட வாய்ப்புகள் கிடைக்காத சூழலில் விஜயகாந்த் அம்மன் கோவில் கிழக்கில் வைதேகி காத்திருந்தாள் போன்ற தனது படத்தில் செந்திலுக்கு நடிப்பதற்காக வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.

எனக்கு துரோகம் பண்ணி இருந்தாலும்.. பசங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கீங்க பாக்கியாவிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

கரண்: நடிகர் கரணுக்கு கண்ணுபட போகுதய்யா என்ற படம் திருப்புமுனையாக அமைந்தது இந்த படத்தில் விஜயகாந்த் அவர்களுடைய தம்பியாக நடிப்பதற்கு கரணுக்கு விஜயகாந்த் தான் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் பல உண்மையான சினிமாவின் நுணுக்கங்களை கரணுக்கு கற்றுக் கொடுத்துள்ளாராம்.

வடிவேலு: கவுண்டமணி செந்தில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காலகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட வடிவேலுக்கு நல்ல கலைஞன் வளர வேண்டும் என்பதற்காக தனது பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

மன்சூர் அலிகான்: மன்சூர் அலிகானுக்கு கேப்டனின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மன்சூர் அலிகானுக்கு ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

வடிவேலுவை பகைத்துக் கொண்ட 5 நட்சத்திர ஹீரோக்கள்.. தர்ம அடி வாங்கிய வைகைபுயல்

தளபதி விஜய்: தளபதி விஜய் நாளைய தீர்ப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு ரீச்சாகவில்லை எனவே அதன் பிறகு செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக கேப்டன் விஜயகாந்த் நடித்திருப்பார். இவ்வாறு ஆரம்பத்தில் தளபதி விஜய் ரீச் ஆவதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் உதவி செய்துள்ளார்.