ஒரே நாளில் மோதி கொண்ட விஜயகாந்த், அஜித் விஜய் படங்கள்.! எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

Ajith : சினிமா உலகில் ஒரே டாப் ஹீரோ படம் வந்தாலே அதை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள் ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பல டாப் ஹீரோகளின் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தும்..

அப்படி 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பல டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து மோதி உள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் 1990,2000 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.. இவர் நடிப்பில் வெளியான ரமணா, அஜித்தின் வில்லன், விஜயின் பகவதி ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதின. இந்த படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மகாவுக்கு மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. பொறாமையில் பொங்கி எழும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

விஜயகாந்தின் ரமணா படம் முழுக்க முழுக்க லஞ்சம் வாங்குபவர்களை தேடி பிடித்து கொலை செய்வது தான் இந்த படத்தின் கதை படம் எமோஷனல், ஆக்சன் என இருந்ததால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது ஓட்டு மொத்தமாக 25 கோடி வசூல் செய்தது.

வில்லன் திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இந்த படத்தின் கதை என்னவென்றால் கொள்ளையடித்து பணத்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்வார் படம் காமெடி, ஆக்‌ஷன், எமோஷனல் எனக்கு இருந்ததால் சக்கபோடு போட்டது ஒட்டுமொத்தமாக 25 கோடி வசூல் செய்தது.

வீம்புக்கு போட்டியாக விசேஷம் நடத்தி பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்.! அனாதை என்ற உடன் அடிக்க சென்ற கதிர்.!

பகவதி படத்தில் தனது தம்பியை வில்லன் குரூப் கொன்றுவிடுவார்கள் அதன் பிறகு விஜய் மிகப்பெரிய ஒரு தாதாவாக மாறி அவர்களை கொள்வார் படத்தில் ஆக்சன் எமோஷனல் என அனைத்தும் இருந்ததால் படம் வெற்றி பெற்றது உலகம் எங்கும் 15 கோடி வசூல் செய்தது.